ஐசிஐசிஐ வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் இனிமேல் கார் லோன் பெறுவது மிக மிக சுலபம். விண்ணபித்த 4 மணி நேரத்தில் உங்கள் கையில் பணம் வந்து சேர்ந்து விடும்.
ஐசிஐசிஐ வங்கி கார் லோன்:
ஹோம் லோனுக்கு பிறகு அதிகப்படியான மக்களின் தேவை கார் லோன். சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்பது பலரின் ஆசையும். அதிலும் வீட்டில் 4 பேருக்கு மேல் அதிகமாக இருந்தால் இருசக்கர வாகனத்தை விட கார் வாங்குவதே சிறந்த ஐடியாவாக இருக்கும்.
கார் லோனை பொருத்தவரையில் பல வங்கிகளில் பல்வேறு நிபந்தனைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. அதே போல் வழகத்தை விட ஆவணங்கள் சற்று கூடுதலாக கேட்கப்படுகின்றன. ஆனால் இனிமேல் ஐசிஐசிஐ வங்கியில் அந்த பிரச்சனை இல்லை. ஐசிஐசிஐ வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் இனிமேல் கார் லோன் பெறுவது மிக மிக சுலபம்.
read it.. எச்டிஎப்சி தரும் சூப்பரான லாபம்!
சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் 100 சதவீதம் கார் கடனை இனி பெறும் திட்டத்தை ஐசிஐசிஐ வங்கி கடந்த அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் ரூ. 20 லட்சம் வரை கடனாக பெற முடியும்.
இதன் மூலம் கார் சாலையில் இயங்கும் வரையிலான செலவு எவ்வளவு, அத்தனைக்கும் சேர்த்து வங்கியில் கடனாக வழங்கப்படுகிறது.இந்த கடன் விண்ணப்பித்த 4 மணி நேரத்தில் வாடிக்கையாளருக்கு கிடைத்துவிடும் என்பது மற்றொரு ஆச்சரியமான தகவல். காரணம், கார் லோனை பொருத்தவரையில் பலரும் விழாக்காலங்களிலே இதற்காக திட்டமிடுவார்கள்.
ஏனென்றால் இந்த விழாக்கால சமயத்தில் பல்வேறு நிறுவனங்கள் புதுமையான ஆஃபர்களை அறிவிப்பார்கள். அந்த நேரத்தில் நாம் கார் வாங்க திட்டமிட்டு உடனே வங்கிக்கு சென்றால் நினைத்த நேரத்தில் லோன் ஓகே ஆவதில்லை.
ஆனால் ஐசிஐசிஐ வங்கியில் அந்த பிரச்சனை இல்லை. மேலும், கடனை பெற ஐசிஐசிஐ வங்கிக்கு நேரிலோ அல்லது ஐசிஐசிஐ வங்கி கணக்கு வைத்துள்ளோர், அதில் பதிவு செய்துள்ள மொபைல் எண் மூலம் 5676766 எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.