Icici Bank | Fixed Deposits | ரூ.7.84 லட்சம் கோடி சந்தை மதிப்புடன், நாட்டின் இரண்டாவது பெரிய தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ரூ.3 கோடிக்கும் குறைவான ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை திருத்தியுள்ளது.
தற்போது அதிகபட்ச எஃப்.டி வருமானம் 7.70% மற்றும் பொது மக்களுக்கு அதிகபட்ச வருமானம் 7.20% வழங்குகிறது. மூத்த குடிமக்கள் விகிதங்கள் உள்நாட்டு கால வைப்புகளுக்கு மட்டுமே பொருந்தும். ஜூன் 14 முதல் நடைமுறைக்கு வரும் திருத்தப்பட்ட நிலையான வைப்பு வட்டி விகிதங்களுக்கு பொருந்தும் ஆகும்.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி எஃப்.டி விகிதங்கள்
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் 7 முதல் 29 நாள்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு 3.00% வட்டி விகிதமும், 30 முதல் 45 நாட்களில் முதிர்ச்சியடையும் கணக்குகளுக்கு 3.50% வட்டி விகிதமும் வங்கி வழங்குகிறது.
46 முதல் 60 நாள்கள் வரையிலான நிலையான வைப்பு விதிமுறைகளுக்கு, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி 4.25% வட்டி விகிதத்தை வழங்குகிறது. 61 முதல் 90 நாள்கள் வரையிலான எஃப்.டி.களுக்கு, வட்டி விகிதம் 4.50% ஆகும். ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில், 91 முதல் 184 நாள்களுக்குள் முதிர்வுக் காலம் கொண்ட நிலையான வைப்புகளுக்கு 4.75% வட்டியும், 185 முதல் 270 நாள்களுக்குள் முதிர்வு உள்ளவர்களுக்கு 5.75% வட்டியும் வழங்கப்படும்.
மேலும், ஐசிஐசிஐ வங்கி 1 வருடம் முதல் 15 மாதங்களில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 6.70% வட்டி விகிதத்தை வழங்குகிறது. அதே நேரத்தில் வங்கி 271 நாள்கள் முதல் ஒரு வருடத்திற்குள் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 6% வட்டி செலுத்தும்.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் இருந்து 15 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு 7.20% வட்டி விகிதங்கள் கிடைக்கும். ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் 5 ஆண்டுகள், 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் பொது டெபாசிட்டுகளுக்கு 6.90% வட்டி கிடைக்கும்.
ஹெச்.டி.எஃப்.சி வங்கி
சமீபத்தில் ஜூன் 12 ஆம் தேதி, இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்கும் நிறுவனமான HDFC வங்கி, 3 கோடி ரூபாய்க்கும் குறைவான நிலையான வைப்புகளுக்கு வட்டி விகிதத்தை உயர்த்துவதாக அறிவித்தது. 18 மாதங்கள் முதல் 21 மாதங்கள் வரையிலான காலப்பகுதியில், HDFC வங்கி இப்போது பொது மக்களுக்கு அதிகபட்சமாக 7.25% மற்றும் 7.75% வருமானத்தை வழங்குகிறது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“