ஐசிஐசிஐ வங்கியில் அக்கவுண்ட் வைத்திருப்பவரா நீங்கள்… இதோ உங்களுக்கு ஒரு குட் நியூஸ்

ICICI Bank Hikes Fixed Deposit Interest Rates: ஐசிஐசிஐ வங்கி தற்போது 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையான வெவ்வேறு  ஃபிக்ஸட் டெபாசிட்  திட்டங்களை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Bank Strike 2019
Bank Strike 2019

ICICI Bank Hikes Interest Rates for Fixed Deposit: ஐசிஐசிஐ வங்கியில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு ஒரு குட்நியூஸ். வங்கி நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஃபிக்ஸட் டெபாசிட் (Fixed Deposit) திட்டங்களுக்கு வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது.  இதன் மூலம்   ஐசிஐசிஐ வங்கியில் ஏற்கனவே ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களை தொடருபவர்கள்  இனி அதிகரிக்கப்பட்ட வட்டி விகிதத்தை பெற முடியும். டெப்பாசிட்களுக்கான வட்டி விகிதம் உயர்வு குறித்த விவரங்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.

பெரும்பாலான மக்களால் அதிகம்   சேவிங் அக்கவுண்ட் தொடரப்படும் வங்கிகள் லிஸ்டில் ஐசிஐசிஐ வங்கிக்கும் இடம் உண்டு. இந்நிலையில் இந்த  வங்கி நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நிலையான ஃப்க்ஸ்ட் டெபாசிட்  திட்டங்களுக்கு வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. இந்த வட்டி விகித அதிகரிப்பு  கடந்த நவம்பர் 15 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.  இதுவரை  குறைவான வட்டி விகிதத்தை எண்ணி கவலையடைந்த   வாடிக்கையாளர்கள் இந்த அறிவிப்பு மூலம் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ICICI Bank FD Rates: ஐசிஐசிஐ வங்கி:

இந்த அறிவிப்புக்கு பின், வட்டி விகிதம்  பொதுப்பிரிவினர்க்கு 7.5 சதவீதமாகவும் மூத்த குடிமக்களுக்கு 8 சதவீதமாகும் உள்ளது. இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரையான நிலை வைப்புத் தொகைக்கு மட்டுமே இந்த வட்டி விகிதம் பொருந்தும் என்று ஐசிஐசிஐ வங்கி கூறியுள்ளது.

மேலும், NRI தொடங்ககூடிய வங்கி கணக்குகளான என்.ஆர்.ஓ  மற்றும் என்.ஆர்.இ ஆகிய வங்கி கணக்குகள் ரூ.1கோடி வரையிலான வைப்புத் தொகைக்கு இந்த வட்டி விகிதம் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Icici bank hikes fixed deposit interest rates

Next Story
பென்ஷன் வாங்குபவர்கள் கவனத்திற்கு..30 ஆம் தேதிக்குள் இதை சமர்பித்தால் தான் இனி பென்ஷன்!SBI
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com