icici bank home loan icici home loan icicibank : யாருக்கு தான் வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்காது.. ஜான் இடமாக இருந்தாலும் சொந்த இடமாக இருக்க வேண்டும் என தான் யாருமே நினைப்பார்கள்.. சரி வீடு வாங்குவது என்ன அந்த அளவிற்கு சுலபமா என்ன..?
ஒரே நேரத்தில் லட்சங்களில் பணத்தை எப்படி புரட்ட முடியும்.. முடியாது அல்லவா..? அதாவது நடுத்தர மக்களுக்கு கண்டிப்பாக முடியாது தான்.. இதற்கெல்லாம் இருக்கும் ஒரே வழி வங்கியில் லோன் பெறுவது தான் அல்லவா..?
இவ்வாறு பெறப்படும் லோன் மூலம் நாம் நினைக்கும் வீட்டை வாங்கி மாதம் மாதம் தவணை முறையில் சில குறிப்பிட்ட தொகையை இஎம்ஐ யாக செலுத்துவோம். இவ்வாறு செலுத்தப்படும் மாத தவணை குறைந்தது பத்து ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக முப்பது ஆண்டுகள் வரை நீட்டித்து, வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாத தவணை தொகையை நிர்ணயிக்கின்றனர்.
இந்த இடைப்பட்ட ஆண்டுகளில், லோன் பெற்றவருக்கு எதாவது நேர்ந்தாலோ அல்லது மாத தவணை கட்ட முடியவில்லை என்றால் கடன் மறு சீரமைப்பு மூலம், கடனை கட்ட கால அவகாசம் கொடுப்பது அல்லது வேறு எதாவது மாற்று முறைக்கு வழி வகுக்கிறது.
சரி வாருங்கள். வீட்டு கடனுக்கு ரூ. 2 லட்சம் முதல் ரூ. 50 லட்சம் வரை லோன் வழங்கும் ஐசிஐசிஐ வங்கி திட்டம் பற்றி தெரிந்துக் கொள்ளலாம். டெல்லியில் அமைப்புசாரா துறையில் பணிபுரியும் திறமையான தொழிலாளர்களுக்காக ஐ.சி.ஐ.சி.ஐ ஹோம் ஃபைனான்ஸ் புதிய கடன் திட்டத்தை ‘அப்னா கர் ட்ரீம்ஸ்’ அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் கீழ் ரூ .2 லட்சம் முதல் ரூ .50 லட்சம் வரையிலான கடன்களை எடுக்க முடியும்.
இந்தத் திட்டத்தில் தச்சர்கள், எலக்ட்ரீசியன்கள், தையல்காரர்கள், ஓவியர்கள், வெல்டிங் தொழிலாளர்கள், குழாய் சரிசெய்தல் (பிளம்பர்ஸ்), வாகன ஆலைகள், உற்பத்தி இயந்திரம் தயாரிப்பாளர்கள், நகரத்தில் பணிபுரியும் ஆர்ஓ ஃபிக்ஸர்கள் ஆகியவை அடங்கும் என்று நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. , சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு, மளிகை கடைக்காரர்களும் கடன் பெறலாம். இந்த திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் 20 ஆண்டுகளுக்கு கடன் பெறலாம்.
ரூ .5 லட்சத்துக்கு மேல் கடன்களுக்கு, குறைந்தபட்சம் ரூ .3,000 கணக்கில் உள்ளது.
மேலும் விவரங்களுக்கு ஐசிஐசிஐ வங்கியை உடனே தொடர்பு கொள்ளுங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil