ஐசிஐசிஐ கஸ்டமர்ஸ் இந்த நியூஸ் உங்களுக்கு தான்!

இந்த திட்டம் வாடிக்கையாளர்களை பெரிதளவில் கவரும்

By: Updated: March 1, 2019, 05:22:27 PM

ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களின் வசதிக்காக புதிய சேமிப்புத்திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

எப்டி எக்ஸ்ட்ரா என்ற பெயரில் ஐசிஐசிஐ வங்கி தொடங்கியிருக்கும் இந்த திட்டம் வாடிக்கையாளர்களை பெரிதளவில் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இவை வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அதே சமயம், கூடுதலாக டேர்ம் இன்ஷூரன்ஸ் வசதியுடனும் வரும் டெபாசிட் திட்டங்களாகும். எப்டி எக்ஸ்ட்ரா திட்டங்கள், பல்வேறு திட்டங்களை உள்ளடக்கியது. முதல் திட்டம் எப்டி லைஃப் (FD Life).

இது 18-50 வயதான வாடிக்கையாளர்களுக்கு வருமான வளர்ச்சி தரும் எப்டி முதலீட்டுத் திட்டத்தையும், இலவசமாக ஓராண்டுக்கான டேர்ம் இன்ஷூரன்ஸ் திட்டத்தையும் வழங்கும் இரட்டை பலனுள்ள திட்டமாக இருக்கிறது. வாடிக்கையாளர்கள் விரும்பினால் அடுத்த ஆண்டும் இந்த காப்பீட்டு சலுகையை நீடித்துக் கொள்ளலாம்.மேலும் பிரத்யேக பலனாக இலவச டேர்ம் ஆயுள் காப்பீடு வசதியையும் ஐசிஐசிஐ புரூடென்சியல் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனம் மூலம் அளிக்கிறது.

எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்… என்ன நீங்க தயாரா?

குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு ரூ. 3 லட்சம் நிரந்தர சேமிப்புக் கணக்கில் போட்டால், ரூ. 3 லட்சம் மதிப்புள்ள டேர்ம் லைஃப் இன்ஷூரன்ஸ் கவரேஜ் அளிக்கப்படும். அடுத்த திட்டம், எஃப்டி இன்வெஸ்ட் (FD Invest) என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் எஃப்டி மூலம் பெறும் வட்டிவருமானத்தை ஐசிஐசிஐ புரூடென்சியல் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் பரஸ்பர நிதி திட்டங்களில், சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் மூலம் முதலீடுசெய்ய முடியும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Icici bank introduces super premium credit card

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X