ICICI bank Latest FD rates : தனியார் துறை கடன் வழங்கும் நிறுவனமான ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி மற்றும் ஆர்.பி.எல் ஆகியவை ₹2 கோடிக்கு கீழ் உள்ள நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்களை திருத்தியுள்ளன.
இரு வங்கிகளின் இணையதளங்களின்படி, இந்த விகிதங்கள் அக்டோபர் 16 திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளன.
ஐசிஐசிஐ வங்கி எஃப்டி விகிதங்கள்
சமீபத்திய உயர்வுக்குப் பிறகு, ஐசிஐசிஐ வங்கி பொது வாடிக்கையாளர்களுக்கு ஏழு நாள்கள் முதல் பத்து ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் எஃப்டிகளுக்கு 3% முதல் 7.1% வரை வட்டி விகிதத்தையும் மூத்த குடிமக்களுக்கு 3.5% முதல் 7.65% வரையிலும் வழங்குகிறது.
15 மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை, ஐசிஐசிஐ வங்கி பொது மக்களுக்கு அதிகபட்சமாக 7.10% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.65% வருமானத்தை வழங்குகிறது.
மூத்த குடிமக்களின் சிறப்பு கால வைப்புத் திட்டமான கோல்டன் இயர்ஸ் எஃப்டியின் காலத்தையும் வங்கி நீட்டித்துள்ளது.
ஆர்.பி.எல் வங்கி
ஆர்.பி.எல் (RBL) வங்கி ₹2 கோடிக்கு கீழ் உள்ள நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதங்களை திருத்தியுள்ளது. சமீபத்திய உயர்வுக்குப் பிறகு, ஐசிஐசிஐ வங்கி பொது வாடிக்கையாளர்களுக்கு ஏழு நாள்கள் முதல் பத்து ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் எஃப்டிகளுக்கு 3.5% முதல் 7.80% வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 4.00% முதல் 8.3% வரையிலும் வட்டி விகிதத்தை வழங்குகிறது.
ஆர்.பி.எல் (RBL) வங்கியானது 453 நாள்கள் முதல் 24 மாதங்களுக்கும் குறைவான கால அவகாசத்தில் பொது மக்களுக்கு அதிகபட்சமாக 7.80 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 8.30% வருமானமும் வழங்குகிறது.
பாங்க் ஆஃப் பரோடா
பாங்க் ஆஃப் பரோடா பல்வேறு தவணைக்காலங்களில் நிலையான வைப்பு (FD) வட்டி விகிதங்களை 50 அடிப்படை புள்ளிகள் (bps) வரை உயர்த்தியுள்ளது.
யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி லிமிடெட் (யூனிட்டி வங்கி) தேர்ந்தெடுக்கப்பட்ட தவணைக்காலங்களில் நிலையான வைப்புத்தொகைக்கு வழங்கப்படும் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது.
மற்ற வங்கிகள்
தனியார் வங்கிகளான யெஸ் வங்கி மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகியவை ₹2 கோடிக்கும் குறைவான டெபாசிட்டுகளுக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்திற்கான நிலையான வைப்பு வட்டி விகிதத்தை குறைத்துள்ளன.
இண்டஸ்இந்த் (IndusInd) வங்கி மற்றும் பஞ்சாப் & சிந்து வங்கி ஆகியவை அக்டோபர் 2023 இல் தங்கள் கால வைப்புகளுக்கான FD வட்டி விகிதங்களைத் திருத்தியுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“