ICICI Bank News: இந்திய ரிசர்வ் வங்கி நீட்டித்துள்ள கடன் மாத தவணை செலுத்துவதை ஒத்திப்போடும் அவகாசத்தை தொடர்ந்து, தனியார் வங்கியான ஐசிஐசிஐ யும் வாடிக்கையாளர்கள் கடன் மாத தவணை செலுத்த வழங்கப்பட்ட அவகாசத்தையும் கடன் அட்டை பாக்கிகள் செலுத்துவதற்கான அவகாசத்தையும் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
கடனுக்கான மாத தவணையை செலுத்துவது அல்லது தவணை செலுத்துவதை ஒத்திப்போடுவது ஆகிய இரண்டு விருப்ப தேர்வுகளை ஐசிஐசிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது.
ஒரு வேளை நீங்கள் கடன் மாத தவணையை ஒத்தி போடும் முறையை தேர்ந்தெடுத்தால் ஒத்திப்போடும் காலத்திற்கு நிலுவையில் உள்ள தொகைக்கு பொருந்தக்கூடிய வட்டி தொடர்ந்து வசூலிக்கப்படும். ஒத்திப்போடப்பட்ட தவணைகளை வசூலிக்க தவணை செலுத்தும் கால அட்டவணை நீட்டிக்கப்படும் அதில் நிலுவையில் உள்ள அசல் மற்றும் வட்டி ஆகியவையும் அடங்கும்.
தற்போது நீங்கள் ஜூன் மாதத்திற்கு மட்டும் தான் கடன் தவணை செலுத்துவதை ஒத்திப்போட முடியும். ஜூன் மாதத்திற்கான கடன் தவணையை ஒத்திப்போட வேண்டுமென்றால் நீங்கள் ஜூன் 24 ஆம் தேதிக்குள் அதற்கு விண்ணப்பிக்க வேண்டும். அடுத்து ஜூலை மற்றும் ஆகஸ்ட மாதங்களுக்கு கடன் தவணையை ஒத்திப்போட விரும்பினால் அதற்கு தனித்தனியாக மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
கடனுக்கான மாத தவணை செலுத்துவதை ஒத்தி போட வேண்டுமென்றால் உங்கள் கடன் தவணை தொகையை செலுத்தும் தேதிக்கு குறைந்தது 5 வேலை நாட்களுக்கு முன்னரே அதற்கு விண்ணப்பிக்க வேண்டும். ஒரு வேளை தவணை செலுத்துவதற்கான தேதி முடிந்த பின்னர் உங்கள் தவணை தொகை எடுக்கப்பட்ட பின்னர் நீங்கள் ஒத்திவைப்புக்கு விண்ணப்பித்தால், 7 வேலை நாட்களுக்கு பிறகு தான் நீங்கள் அடைத்த பணம் திருப்பி தரப்படும்.
கடனுக்கான மாத தவணை செலுத்துவதை ஒத்திப்போடுவது தொடர்பாக வங்கி உங்களுக்கு அனுப்பிய குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சலில் உள்ள இணைப்பை சொடுக்கி நீங்கள் கடனுக்கான மாத தவணை ஒத்திப்போடுவதை தேர்வு செய்யலாம் அல்லது உங்கள் வங்கி கிளைக்கு நேரடியாக சென்றும் அதற்கு விண்ணப்பிக்கலாம்.
ஏற்கனவே கடனுக்கான மாத தவணை செலுத்துவதை ஒத்திப்போடும் வசதியை மார்ச் 1 முதல் மே 31 வரை தேர்வு செய்திருந்தால், அடுத்த மூன்று மாதங்களுக்கும் ஜூன்1 முதல் ஆகஸ்ட் 31 வரை அது தானாக நீடிக்கப்படாது. ஒவ்வொரு மாதத்துக்கும் தனித்தனியாக நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook
Web Title:Icici bank loan emi moratorium extendedloanlockdowncoronavirusmoratorium