icici bank minimum balance : தேவைக்கு பயன்படும், பாதுகாப்பாகவும் இருக்கும், ரொம்ப நாள் வச்சிருந்தா வட்டியும் கிடைக்கும் என பல காரணங்களுக்காக உழைத்து சேமித்த பணத்தை வங்கியில் போடுகிறார்கள் பொதுமக்கள்.
ஆனால் நாம் சேமிக்கு பணம் எதற்காக என்பதை கூட தெரிந்துக் கொள்ள விரும்பாத வங்கிகள் எதாவது ஒரு காரணத்தை சொல்லி உங்கள் கணக்கில் நாங்கள் குறிப்பிட்ட அளவுக்கு கீழே இருப்புத்தொகை இருக்கிறது என ஒரு காரணம் சொல்லி உங்கள் கணக்கை பராமரிக்க இவ்வளவு அபராதம் விதிக்கப்போகிறோம் என அபராதங்களை வசூல் செய்கிறது.
இதை நினைத்தாலே வாடிக்கையாளர்கள் தலை கிர்ரென சுற்றி விடுகிறது. மினிமம் பேலன்ஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுவரை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா. அடுத்ததாக HDFC வங்கி 590 கோடி ரூபாய்களும், ஆக்சிஸ் வங்கி 530 கோடி ரூபாய்களும், ICICI வங்கி 317 கோடிகளும் அபராதமாக வசூலித்துள்ளன.
பெண்களுக்கு எந்த வங்கியில் ஈஸியாக கடன் கொடுப்பாங்க தெரியுமா?
ஒவ்வொரு வங்கியும் மாநகரம், நகரம், கிராமம் என இடம் சார்ந்து சேமிப்புக் கணக்குகளுக்கென இருப்புத்தொகைக்கு விதிகள் வைத்திருக்கின்றன. ஒவ்வொரு வங்கிக்கும் இது மாறும். அதேபோல அபராதம் வசூலிக்கவும் ஒவ்வொரு வங்கியும் தனக்கென விதிகள் கொண்டு செயல்படுகின்றன.
எப்படி தப்பிக்கலாம்?
1. Basic Savings Bank Deposit (BSBD) அல்லது ப்ரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டங்களின் மூலம் வங்கிகளில் கணக்கு தொடங்கலாம். இதில் மினிமம் பேலன்ஸ் பிரச்சனை இருக்காது.
2. இந்த வங்கிக்கணக்குகளுக்கு இலவச ATM அட்டையும் வழங்கப்படுகிறது. சேமிப்பில் இருக்கும் தொகைக்கு குறைந்தபட்சமாக 3% வட்டியும் தரப்படுகிறது.
3. பெரும்பாலான மக்கள் வங்கிக்கணக்கு தொடங்கும்போது எதையும் விசாரிக்காமல், வங்கிக்கணக்கு ஆரம்பித்தால் போதும் என்று அவசரத்தில் தொடங்குவதால், போதிய கேள்விகள் கேட்காமல் காட்டிய இடங்களிலெல்லாம் கையெழுத்துப்போட்டு ஆரம்பிப்பதாலும் இந்த அபராதங்களை சந்திக்க நேர்கிறது.