icici bank net banking : தனியார் வங்கிகளில் மிகச் சிறந்த சேவை வழங்கிக் கொண்டிருந்த ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. சமீபத்தில் இந்த வங்கி வெளியிட்டிருக்கும் அறிவிப்பு வாடிக்கையாளர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அந்த அறிவிப்பு என்னவென்றால் ஜீரோ பேலன்ஸ் சேமிப்புக் கணக்குதாரர்கள் எந்த ஐசிஐசிஐ வங்கிக் கிளையில் பணம் எடுத்தாலும் டெபாசிட் செய்தாலும் கட்டணம் வசூலிக்கப்படும் என்பது தான்.கடந்த வாரம் இதுக் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது. ஐசிஐசிஐ வங்கியில் குறைந்தபட்ச இருப்புத் தொகை, ஜீரோ பேலன்ஸ், சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இந்த புதிய கட்டண கொள்கை பொருந்தும்.
ஐசிஐசிஐ ஜீரோ பேலன்ஸ் சேமிப்புக் கணக்குதாரர்கள் எந்த ஐசிஐசிஐ வங்கிக் கிளையில் பணம் எடுத்தாலும் 100 ரூபாய் முதல் 125 ரூபாய் வரை கட்டணம் பெறப்படும். இதேபோல பணத்தை டெபாசிட் செய்வதற்கும் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த அறிவிப்பின் படி புதிய கட்டண விதிமுறையானது அக்டோபர் 16ஆம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது.
கூடவே முக்கிய தகவலும் பகிரப்பட்டுள்ளது. அதாவது, இந்த புதிய கட்டண முறை வேண்டாம் என்று நினைத்தால் வாடிக்கையாளர்கள் ஜீரோ பேலன்ஸ் சேமிப்புக் கணக்கில் இருந்து வேறு சேமிப்புக் கணக்குகளுக்கு மாறிக்கொள்ளலாம்.
எஸ்பிஐ -யில் இனி மினிமம் பேலன்ஸ் பேச்சுக்கே இடமில்லை!
இதில் ஆறுதல் தரும் ஒரே செய்தி, ஐசிஐசிஐ வங்கியின் ஆன்லைன் பரிவர்த்தணையான என்இஎப்டி (NEFT), ஆர்டிஜிஎஸ் (RTGS) மற்றும் யுபிஐ (UPI) போன்ற வழிகளில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செய்ய விதிக்கப்பட்ட அனைத்துக் கட்டணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தற்போது ஐசிஐசிஐ வங்கிக் கிளைகளில் செய்யப்படும் என்இஎப்டி (NEFT) முறை பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் ரூ. 2.25 ரூபாய்.
இது 10,000 ரூபாய்க்கு உட்பட்ட மற்றும் 10 லட்சம் ரூபாய் வரையான தொகைக்கு மட்டும் பொருந்தும். ஆர்டிஜிஎஸ் (RTGS) முறையில் 2 லட்சம் ரூபாய்க்கு மேலான மற்றும் 10 லட்சம் ரூபாய் வரையான தொகைகளின் பரிவர்த்தனைக்கு 20 ரூபாய் முதல் 25 ரூபாய் கட்டணம் பெறப்படும்.