icici bank netbanking icici : இந்தியாவின் மிகப் பெரிய தனியார் துறை வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ பேங்க், நெஃப்ட், ஆர்.டி.ஜி.எஸ். யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்களை லாக்டவுன் காலத்தில் பல்வேறு கட்டண முறைகளை ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. வாடிக்கையாளர்கள் இடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
Advertisment
icici bank netbanking icici : கட்டண முறை!
இந்நிலையில் சமீபத்தில் ஐசிஐசிஐ வங்கி வெளியிட்டிருந்த அறிவிப்பு ஒன்றில், ஐசிஐசிஐ வங்கிக் கிளைகளில் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறியிருந்தது. அக்கவுண்ட்டில் ஜீரோ பேலன்ஸ் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களிடம் மட்டுமே இக்கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தன.
அந்த அறிவிப்பின் படி வங்கிக் கிளைகளில் பணம் எடுப்பதற்கு ரூ.100 முதல் ரூ.125 வரையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் வங்கிகளில் பணம் டெபாசிட் செய்வதற்கும் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த அறிவிப்பு ஏற்கனவே நடைமுறைக்கு வந்து விட்ட நிலையில் வாடிக்கையாளர்கள் இதுக் குறித்து தெளிவான் விளக்கம் தெரியாமல் குழம்பி வருகின்றன.
அவர்களுக்காகவே இந்த பதிவு. அதாவது, ஐசிஐசிஐ வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இது பொருந்தாது. வங்கியில் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட், மற்றும் சேலரி அக்கவுண்ட் தொடர்பவர்களுக்கு மட்டுமே இந்த புதிய விதி.நீங்கள் ஐசிஐசிஐ வங்கியின் எந்த கிளையில் அல்லது நீங்கள் அக்கவுண்ட் வைத்திருக்கும் வங்கி என எங்கு பணத்தை டெபாசிட் செய்தாலும் அதற்கு ஒரு குறிப்பிட்ட்ட தொகையை செலுத்த வேண்டும். அதே போல் உங்கள் அக்கவுண்டில் இருந்து நீங்கள் பணம் எடுத்தாலும் அதற்கும் தனி கட்டணம். ஏடிஎம்மில் எடுத்தால் இந்த விதி பொருந்தாது. வங்கிக்கு சென்று நேரில் எடுத்தால் மட்டுமே இந்த விதியும் பொருந்தும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil