உஷார்... போலி இ-மெயில்களை நம்பி அதை மட்டும் செய்து விடாதீர்: முக்கிய வங்கி எச்சரிக்கை
ICICI Bank Online Fraud Alerts: இந்தவகை விவரங்களை ஒருபோதும் வங்கி அல்லது e-wallet நிறுவன அலுவலர்கள் கேட்கமாட்டார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
ICICI Bank Online Fraud Alerts: இந்தவகை விவரங்களை ஒருபோதும் வங்கி அல்லது e-wallet நிறுவன அலுவலர்கள் கேட்கமாட்டார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
ICICI Bank News In Tamil, ICICI Bank News, ICICI Bank Chennai News, ஐசிஐசிஐ வங்கி
ICICI Bank News In Tamil: கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக வங்கிகள், வாடிக்கையாளர்களிடம் ஆன்லைன் கருவிகளான இணையதள வங்கி சேவை மற்றும் வங்கி ஆப்களை பயன்படுத்தி சேவைகளை பெற்றுக் கொள்ள வலியுறுத்துகின்றன. சமூக இடைவெளியை கடைபிடித்து வாடிக்கையாளர்கள் வங்கி கிளைகளுக்கு வராமல் இருப்பதை இது உறுதி செய்கிறது. எனினும் அதிகரித்துள்ள ஆன்லைன் பரிவர்த்தனைகள் காரணமாக மோசடி செய்பவர்கள் இதை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தி மக்களை ஏமாற்ற துவங்கிவிட்டனர்.
Advertisment
வங்கி மோசடிகளிலிருந்து தனது வாடிக்கையாளர்களை பாதுகாத்திட ஐசிஐசிஐ வங்கி சில ஆலோசனைகளை வழங்கியுள்ளது. இணையதள வங்கி சேவை, வங்கி ஆப் மற்றும் e-wallet ஆப்களை பயன்படுத்தும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்,
அனுப்புனரின் மின்னஞ்சல் முகவரியை சரிப்பார்க்கவும். அது எப்போதும் வங்கியின் சரியான பெயராக இருக்க வேண்டும்.
ICICI Netbanking Fraud Alerts: ஐசிஐசிஐ வங்கி எச்சரிக்கை
வங்கி, தொலைதொடர்பு சேவை வழங்குநர், வருமான வரித்துறை அல்லது ஏதாவது அரசு அல்லது தனியார் நிறுவனத்திடமிருந்து உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வந்தால், அதிலுள்ள அனுப்புனரின் முகவரியை கவனமாக பார்க்கவும். எடுத்துக்காட்டாக அனுப்புனர் ஐசிஐசிஐ வங்கியாக இருந்தால் முகவரியில் சரியான பெயர் இருக்க வேண்டும். www.exy.com அல்லது www.irtel.com என்பது போன்று இருக்க கூடாது.
சில வகையான அவசரம் அல்லது பீதியைக் காட்டும் மின்னஞ்சல்கள் பெரும்பாலும் மோசடியானதாக தான் இருக்கும்.
மோசடிக்காரர்கள் கடன் அட்டை அல்லது டெபிட் அட்டை முடக்கப்பட்டுள்ளது என்பது போன்ற பயத்தை ஏற்படுத்தி அவர்கள் வாடிக்கையாளர்களிடம் அவர்களின் வங்கி விவரங்களான கடன் அட்டை எண் மற்றும் பின் (PINs) ஆகியவற்றை பகிர கேட்பார்கள்.
எப்போது எழுத்துப்பிழை உள்ளதா என சரிபாருங்கள். அதிகாரப்பூர்வமான அல்லது நம்பதகுந்த இடங்களில் இருந்து வரும் மின்னஞ்சல்களில் ஒருபோதும் எழுத்துப்பிழை இருக்காது. போலி மின்னஞ்சல்களில் எப்போதும் இலக்கண பிழை மற்றும் எழுத்துப்பிழைகள் இருக்கும்.
மின்னஞ்சல் எங்கிருந்து வந்துள்ளது என்பதை பாருங்கள். தெரியாத ஆதாரங்களிலிருந்து வரும் மின்னஞ்சல்களை திறந்துப் பார்ப்பதை தவிருங்கள். அதிலுள்ள URLs/links/attachments ஆகியவற்றை ஒருபோதும் சொடுக்காதீர்கள்.
ஒருவரோடும் மின்னஞ்சல், தொலைபேசி அழைப்பு அல்லது குறுஞ்செய்தி வழியாக கடன் / டெபிட் அட்டை எண், காலாவதி தேதி, CVV; UPI Pin ஆகியவற்றை ஒருபோதும் பகிராதீர்கள். இந்தவகை விவரங்களை ஒருபோதும் வங்கி அல்லது e-wallet நிறுவன அலுவலர்கள் கேட்கமாட்டார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
‘https’ இணையதளங்களில் மட்டும் நிதி பரிவர்த்தனைகளை செய்யுங்கள்
தகுந்த இடைவெளிகளில் உங்களுடைய பாதுகாப்பு மென்பொருளை (security software) நிருவி புதுப்பித்துக் கொள்ளுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”