Fixed Deposits | Icici Bank | தனியார் துறை கடனாளியான ஐசிஐசிஐ வங்கி, பொது மக்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு ரூ 2 கோடி மற்றும் அதற்கு மேல் ஆனால் ரூ 5 கோடிக்கும் குறைவான ஒற்றை வைப்புத்தொகைக்கான நிலையான வைப்பு (எஃப்டி) விகிதங்களைத் திருத்தியுள்ளது.
ஐசிஐசிஐ வங்கியின் ஃபிக்ஸட் டெபாசிட் விகிதங்கள் 28 டிசம்பர் 2023 முதல் அமலுக்கு வருவதாக வங்கி இணையதளம் தெரிவித்துள்ளது.
ரூ 2 கோடி மற்றும் அதற்கு மேல் ஆனால் ரூ 5 கோடிக்கும் குறைவான ஒற்றை வைப்புத்தொகை வட்டி விகிதங்கள் குறித்து பார்க்கலாம்.
இந்தப் புதிய வட்டி விகிதத்தின்படி, 7 நாள்கள் முதல் 14 நாள்கள் வரையிலான டெபாசிட்களுக்கு சாதாரண குடிமக்களுக்கு 3 சதவீதமும், மூத்தக் குடிமக்களுக்கு 3.50 சதவீதமும் கிடைக்கும்.
தொடர்ந்து, 15-29 நாள்கள் டெபாசிட்களுக்கு 3.00,3.50 வட்டி விகிதமும், 30-45 நாள்களுக்கு 3.50, 4.00 சதவீதமும், 46-60 நாள்களுக்கு 4.25ஈ 4.75 சதவீீதமும், 61-90 நாள்களுக்கு 4.50, 5.00 சதவீதமும், 91-120 நாள்களுக்கு 4.75, 5.25 சதவீதமும் கிடைக்கும்.
அதிகப்பட்சமாக வங்கி மூத்தக் குடிமக்களுக்கு ஓராண்டு முதல் 389 நாள்கள் டெபாசிட்களுக்கு 7.25 சதவீதமும், 2 ஆண்டுகள் 1 நாள் முதல் 3 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்களுக்கு 7.50 சதவீதம் வட்டியும் கிடைக்கும்.
இந்தக் காலக்கெடு ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு சாதாரண குடிமக்களுக்கு 7 சதவீதம் வட்டி கிடைக்கும்.
இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) 6 பேர் கொண்ட நிதிக் கொள்கைக் குழுவின் (எம்பிசி) கூட்டத்திற்கு வாரங்களுக்குப் பிறகு எஃப்டி விகிதத் திருத்தங்கள் வந்துள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“