icici bank savings account interest icici :நிரந்தர சேமிப்பு திட்டம் தொடங்க திட்டமா? இதோ உங்களுக்கு தான் சிறந்த வாய்ப்பு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Advertisment
தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி மூத்த குடிமக்களுக்கு 0.80 சதவீத புள்ளியின் மேம்பட்ட வட்டி வீதத்துடன் ஒரு நிரந்தர வைப்பு (fixed deposit) திட்டத்தை வைத்துள்ளது. முன்பு வங்கிகள் கூடுதல் வட்டியாக 0.50 சதவிகிதத்தை மூத்த குடிமக்களுக்காக வழங்கி வந்தன.
icici bank savings account interest icici : வட்டி அதிகம்!
கொரோனாவுக்கு பின்னர் வட்டி விகிதங்கள் கணிசமாக குறைய துவங்கின. பாரத ஸ்டேட் வங்கி மற்றும் ஹெச்டிஎப்சி போன்ற வங்கிகள் வயதானவர்களுக்கு வழங்கும் ப்ரீமியத்தை மேம்படுத்தியுள்ளனர்.
ஐசிஐசிஐ வங்கியில் 5 முதல் 10 வருடங்கள் வரையிலான கால அளவில் ரூபாய் 2 கோடிக்கு கீழ் டெப்பாஸிட் செய்யும் மூத்த குடிமக்கள் ஆண்டுக்கு 6.55 சதவிகித வட்டியை சம்பாதிப்பார்கள்,இந்த செப்டம்பர் 30 வரை மட்டுமே கிடைக்கும்.
நிரந்தர வைப்பு நிதியில் கிடைக்கும் வட்டி தான் பெரும்பாலான மூத்த குடிமக்களுக்கு முக்கிய வருமான ஆதாரமாக இருப்பதை நாம் அறிவோம். இதை மனதில் வைத்து வட்டி விகிதங்கள் வீழ்ச்சியடைந்து வரும் இந்த சூழ்நிலையிலும், அவர்களுக்கான எங்களது மரியாதையின் அடையாளமாக இந்த புதிய திட்டம் வாயிலாக நாங்கள் அவர்களுக்கு அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறோம், என்று ஐசிஐசிஐ liabilities groupன் தலைவர் Pranav Mishra, கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil