ICICI Bank Loan At ATM: வங்கி சேவையில் பொதுத்துறை வங்கிகள் மட்டுமில்லை சில தனியார் வங்கிகளும் தங்களால் முடிந்த வரை மிகச் சிறந்த அறிவிப்புகளையும், திட்டங்களையும் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டு தான் இருக்கிறது.
ஆனால். பலருக்கும் இது தெரிவதில்லை. அந்த வகையில் இன்று ஐசிஐசிஐ வங்கியில் வாடிக்கையாளர்களுக்காக செயல்படும் ஆகச் சிறந்த திட்டங்களை பற்றி தெரிந்துக் கொள்வோம் வாருங்கள்.
1. உங்களுக்கு அவசர கால கடன் வேண்டும் என்றால் வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. ஐசிஐசிஐ ஏடிஎம் சென்றாலே போதும். ஏடிஎம் இயந்திரத்திலேயே வங்கி கடனுக்கு விண்ணப்பிக்க முடியும்.
2.ஐசிஐசிஐ ஏ.டி.எம். இயந்திரம் மூலமாகவே 15 லட்சம் ரூபாய் வரை வாடிக்கையாளர்கள் கடன் பெறலாம்.
3. இப்படியாகவே 5 வருட தனிநபர் கடன்கள் வழங்கும் திட்டத்தை ஐசிஐசிஐ சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
4. இதற்கு வாடிக்கையாளர் செய்ய வேண்டியது இவை தான். ஏ.டி.எம். இயந்திரத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு வாடிக்கையாளர்கள் பதில் அளிக்க வேண்டும். அதாவது விவரத்தை பதிவு செய்ய வேண்டும்.
5. இதற்கான வட்டி விவரம் மற்ற தகவல்கள் அனைத்தும் ஏ.டி.எம் இயந்திரத்தின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.
6.கடன் பெற்ற அடுத்த மாதத்தில் இருந்து நீங்கள் செலுத்த வேண்டிய வட்டித் தொகையை ஆன்லைன் மூலமாகவோ அல்லது மொபைல் பேக்கிங் மூலமோ செலுத்தலாம்.
வங்கிக்கு சென்று முழு நாளை பயன்படுத்தி அனைத்து விவரங்களையும் பதிவு செய்து வங்கி அலுவர்களை பார்த்து அவசர கடன் வாங்குவதற்குள் உயிர் போய் உயிர் வந்து விடும். ஆனால் ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு அப்படி ஒரு பிரச்சனையே இல்லை.