icici cheque deposit : பணம் எடுக்க, டெபாசிட் செய்ய பயன்படும், ஏ.டி.எம் இயந்திரத்தில், இனி காசோலையை செலுத்தி ரொக்கம் பெற முடியும். இந்த வசதியை இதுவரை தெரிந்துக் கொள்ளாதவர்கள் இங்கே தெரிந்துக் கொள்ளலாம். மற்றவர்களுக்கும் பகிரலாம்.
இன்றைய உலகில் வங்கி சேவை மிக மிக சுலபமாக மாறி விட்டது. கடன் வசதி தொடங்கி, கிரேடிட் கார்டு என ஏகப்பட்ட வச்திகள் வாடிக்கையாளர்கள் சேவைக்கு வந்து விட்டது. அந்த வகையில், ஏடிஎம் மூலம் செக் டெபாசிட் சேவை மற்றும் பணம் எடுக்கும் சேவை வாடிக்கையாளர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது.
எந்த வங்கி ஏடிஎம் – யாக இருந்தாலும் சரி வங்கி வாடிக்கையாளர்கள், முதலில், ஏ.டி.எம் இயந்திரத்தில் உள்ள ‘லைவ் டெல்லர்’ பிரிவின் இணைப்பை பெற வேண்டும். ஒரு பொத்தானை அழுத்தி, இந்த இணைப்பை பெறலாம். உடனே, ஏ.டி.எம் இயந்திரத்தின் முழு கட்டுப்பாடும், வாடிக்கையாளரின் வங்கி அலுவலரிடம் வந்து விடும்.
எஸ்பிஐ கஸ்டமர்ஸ்-க்கு அடித்தது ஜாக்பாட்..வீட்டு கடன் வாங்கி இருந்தா கவலைய விடுங்க!
அவர் அனுமதி அளித்ததும் ஏ.டி.எம் சாதனத்தில் காசோலையை செலுத்த வேண்டும்.
அத்துடன் ஏதாவது ஒரு அடையாளச் சான்றை, அந்த இயந்திரத்திலேயே ‘ஸ்கேன்’ செய்து, அளிக்க வேண்டும். இந்த நடைமுறை முடிந்ததும், ஏ.டி.எம் மானிட்டர் திரை மீது வாடிக்கையாளர் கையொப்பம் இட வேண்டும். இதை இயந்திரம் பரிசீலித்து ஒரு நிமிடத்திற்குள் பணம் வழங்கும்.
வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப, பல மதிப்புகளில் ரொக்கத்தை தேர்வு செய்யும் வசதியும் இதில் உள்ளது. இந்த முறையில் உள்ளூர் மற்றும் வெளியூர் காசோலைகளுக்கு உடனடியாக பணம் பெற முடியும். இந்த ஏ.டி.எம் இயந்திரத்தில் ‘டெபிட்’ கார்டு இல்லாமல் ‘ஆதார்’ எண்ணை தெரிவித்து ரொக்கம் பெறும் வசதியும் உள்ளது.