ஐசிஐசிஐ வங்கியின் அதிரடி.. பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 7.75% வட்சி தருவதாக அறிவிப்பு.

இரு பிரிவுகளுக்கும் 0.10% வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளது.

இரு பிரிவுகளுக்கும் 0.10% வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
icici fixed deposit interest

icici fixed deposit interest

icici fixed deposit interest : ஐசிஐசிஐ வங்கி தனது நிலையான வைப்பு (FD) வட்டி விகிதங்களை ஜூன் 17, 2019 முதல் அமல்படுத்தியுள்ளது. முதிர்வு காலங்களான 61 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை, 91 நாட்கள் முதல் 120 நாட்கள் மற்றும் 121 நாட்கள் முதல் 184 நாட்கள் வரை ஐசிஐசிஐ வங்கி நிலையான வைப்பு வட்டி விகிதங்களை குறைத்துள்ளதாக அதன் அதிகாரபூர்வ வலைதளமான icicibank.com-ல் வெளியிட்டுள்ளது.

Advertisment

ரூ. 2 கோடிக்கு கீழ் நிலையான வைப்பில் பணம் செலுத்தியிருந்தால் பொது மக்களுக்கு 6% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 6.5% என வட்டி விகிதத்தை ஐசிஐசிஐ வங்கி நிர்ணயித்துள்ளது. இதற்கு முன்பு ரூ. 2 கோடிக்கு கீழ் நிலையான வைப்பில் பணம் செலுத்திய பொது மக்களுக்கு 6.25% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 6.75% என வட்டி விகிதத்தை ஐசிஐசிஐ வங்கி நிர்ணயித்திருந்தது.

390 நாட்கள் முதல் 2 ஆண்டுகள் வரையிலான முதிர்வு காலத்திற்கு பொது மக்களுக்கு 7% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.5% என நிலையான வைப்பு நிதியின் வட்டி விகிதத்தை ஐசிஐசிஐ வங்கி நிர்ணயித்துள்ளது. இரு பிரிவுகளுக்கும் 0.10% வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளது.

read more.. எஸ்பிஐ வங்கியில் 3 முக்கிய மாற்றங்கள்.. வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக தெரிந்துக் கொள்ள வேண்டுமாம்!

Advertisment
Advertisements

2 ஆண்டுகள் 1 நாள் முதல் 3 ஆண்டுகள் வரையுள்ள நிலையான வைப்பு வட்டி விகிதங்களை 0.20% வட்டி விகிதங்களைக ஐசிஐசிஐ வங்கி குறைத்துள்ளது. தற்போது பொது மக்களுக்கு 7.3% மற்றும் மூத்த குடிமக்களுக்கும் 7.8 % என வட்டி விகிதத்தை நிர்ணயித்துள்ளது ஐசிஐசிஐ.

1. 390 நாட்கள் முதல் 2 ஆண்டுகள் வரையான திட்டத்திற்கு 7% வட்டி விகிதம்

2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரையான திட்டத்திற்கு 7.3% வட்டி விகிதம்

3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரையான திட்டத்திற்கு 7.25% வட்டி விகிதம்

5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையான திட்டத்திற்கு 7.5% வட்டி விகிதம்

5 வருடங்கள் வரி சேமிப்பு FD (அதிகபட்சம் ரூ. 1 ,50,000 வரை) 7.75% வட்டி விகிதம்.

Icici Bank

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: