icici internet banking : நெட் பேக்கிங் சேவை.. வங்கி வரவு செலவு நடவடிக்கைகளை இதன் உதவிக் கொண்டு பயன்படுத்தாத வாடிக்கையாளர்களே இல்லை. அந்த அளவிற்கு இன்றைய தொழில்நுட்ப உலகில் நெட் பேங்கிங் சேவை அவசியமாக மாறி விட்டது.
இதில் இருக்கும் சிறப்பான வசதி நேரம் குறைவு என்பது தான். வங்கி கணக்கில் மிச்சமுள்ள தொகையை அறிவது, பணப் பரிவர்த்தனை செய்ய பயன்படுத்துவது மட்டுமின்றி, பல்வேறு வசதிகளுக்காகவும் வாடிக்கையாளர்கள் நெட் பேங்கிங் வசதியை பயன்படுத்த துவங்கி விட்டனர்.
சொல்லப்போனால் மியூச்சுவல் பண்ட் சேவை தொடங்கி லைவ் இன்யூரன்ஸ் வரை பல சேவைகள் தற்போது நெட் பேங்கில் வந்துவிட்டனர். இவ்வளவு பாதுகாப்பான சேவைக்கு வங்கி நிர்வாகம் கட்டணம் வசூலிக்காமல் விடுமா என்ன?
தலைச்சிறைந்த வங்கிகளில் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் தனியார் வங்கி நிறுவனமான ஐசிஐசிஐ வங்கி தற்போது நெட் பேங்கிங் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு புதியதொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது, இதுவரை ஆப்ன்லைன் ட்ரான்சேக்ஷன் முறைகளுக்கு வசூலித்து வந்த கட்டணத்தில் சிறிய மாற்றத்தை தெளிவுப்படுத்தியுள்ளது. ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கும் கட்டணம் குறித்த விவரங்கள் இதோ இங்கே
1. ஐ.எம்.பி.எஸ் (IMPS)
ரூ 1000 வரை பணபரிமாற்றம் செய்பவர்களுக்கு எந்தவித கட்டண சேவையும் இல்லை. 10 ஆயிரம் ரூபாய் வரையிலான பணபரிமாற்றத்திற்கு 5 ரூபாய் + ஜி.எஸ்.டியோடு கட்டணம் வசூலிக்கிறது.10,000 முதல் 1 லட்சம் வரை பணபரிமாற்றத்திற்கு 5 ரூபாய் + ஜி.எஸ்.டி தொகையை வங்கிகள் வசூலிக்கின்றன. 1 லட்சம் முதல் 2 லட்சம் வரை பணபரிமாற்றத்திற்கு 15 ரூபாய் + ஜி.எஸ்.டியோடு கட்டணம் நிர்ணிக்கப்பட்டுள்ளது.
அடிக்கடி நெட் பேங்கிக் சேவையை பயன்படுத்துபவரா நீங்கள்? உடனே இதை படியுங்கள்!
2. ஆர்.டி.ஜி.எஸ் (RTGS)
2 லட்சம் முதல் 5 லட்சம் வரை பணபரிமாற்றத்திற்கு 25 ரூபாய் + ஜி.எஸ்.டி தொகையை வங்கிகள் வசூலிக்கின்றன. 5 லட்சத்திற்கும் மேல் பணபரிமாற்றத்திற்கு 50 ரூபாய் + 5 ரூ ஜி.எஸ்.டி தொகை.