நமது தொழிலை விரிவுபடுத்தவும் , அவசர பணத் தேவைகளுக்கும் நாம் கடன் வாங்குவதை முதன்மை விருப்பமாகக் கொள்வோம் ஆனால் வங்கிகளின் கேட்கப்படும் ஆவணங்கள் மற்றும் அதன் நடைமுறைகள் பெரிய அளவில் உள்ளதால் மக்கள் வங்கியில் கடன் பெறும் வசதியைத் தவிர்த்து விடுகின்றனர். எனினும் பாதுகாப்புக்காக இந்த நடைமுறைகள் பின்பற்றப்பட்டாலும் இன்னும் நடைமுறைகள் எளிமைப் படுத்தப்படவில்லை.
இந்த வசதியை எளிமைப்படுத்தி உள்ளது ஐசிஐசிஐ வங்கி . அப்படி ICICI வங்கி அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ள திட்டமே, ஏடிஎம் மூலமே Personal Loan வழங்குவது. இதன்மூலம் வங்கிக்குச் சென்று, கடன் பெறுவதற்காகக் கால்கடுக்க நிற்க வேண்டியது இனிமேல் இருக்காது. ஏடிஎம் கடனுதவி சேவை ஏடிஎம் மூலம் அவசரக் கடன் பெற விரும்புபவர்களாக இருந்தால், உங்களுக்கு அருகில் உள்ள ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம்-மிற்குச் செல்லவேண்டும்.
ATMல் Apply என்ற ஒரு Option இருக்கும். அதில் உங்கள் தகவல்களைக் கொடுத்தால், இந்த கடனைப் பெற நீங்கள் தகுதியானவரா? இல்லையா? என்பதை ஏடிஎம் இயந்திரமேத் தெரிவித்துவிடும். அதாவது தங்கள் வாடிக்கையாளரின், சிபில் ஸ்கோரைப் (CIBIL Score) பொருத்து, விண்ணப்பிக்கத் தகுதியானவரா என்பது உறுதி செய்யப்படுகிறது
எவ்வளவு தொகை? இதன்படி சுமார் ரூ.15 லட்சம் வரை ICICI Personal Loan பெற முடியும். இந்தத் தொகை உங்கள் வங்கிக் கணக்கிலேயே செலுத்தப்படும். வட்டி (Interest) இதற்கு 10 முதல் 17 சதவீதம் வரை வட்டி விதிக்கப்படுகிறது. EMI கடன் தாரர்கள், இந்தக் கடனை 5 ஆண்டுகளுக்குள் மாதாந்திரத் தவணையாகத் திருப்பி செலுத்திவிட வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook
Web Title:Icici loan icici bank loan apply icici loan online icici netbanking
பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை எப்போது? 3 நாட்களில் முடிவெடுக்கும் ஆளுநர்
கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வருவதை வரவேற்கிறேன் : தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ்அழகிரி
டிராகன் பழத்திற்கு சமஸ்கிருத பெயர் : குஜராத் முதல்வரின் நடவடிக்கைக்கு காரணம் என்ன?
சீரம் இன்ஸ்டிடியூட்-ல் திடீர் தீவிபத்து : 5 பேர் பலியானதாக தகவல்