sbi interest sbi bank interest state bank interest
icici loan icici bank loan icici personal loan : கடன் வாங்க காரணம் வேண்டுமா என்ன? ஏதாவது ஒரு அவசர தேவைக்காக தான் கட்டாயம் கடன் வாங்கி இருப்போம் நம்மில் பலரும். அதிலும் தனியார் வங்கிகளில் பர்சனல் லோன் ஈஸியாக கிடைத்து விடும் அப்படி ஐசிஐசிஐ வங்கியில் கடன் வாங்கி இருங்கீங்களா? இந்த தகவல் கண்டிப்பாக உங்களை சந்தோஷப்படுத்தும்.
Advertisment
இந்தியாவின் தனியார் வங்கிகளில் இரண்டாவது வங்கியானது ஐசிஐசிஐ வங்கியானது, அனைத்து கடன்களுக்கான வட்டி விகிதத்தினை 10 அடிப்படை புள்ளிகளை குறைத்துள்ளது.
கடந்த 6 மாத காலமாக கொரோனா ஊடரங்கினால் தவித்த மிடில் கிளாஸ் குடும்பங்கள் ஏராளம்.அதிலும் வீடு லோன், கார் லோன், நகை லோன் என பேங் இஎம்ஐ பிரச்சனையில் மாட்டிக் கொண்டவர்கள் ஏராளம். இதில் ஐசிஐசிஐ வாடிக்கையாளர்களுக்கு ஒருநற் செய்தி. வட்டி கடன்களுக்கான வட்டி விகிதம் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் நிலவி வரும் நெருக்கடிக்கு மத்தியில், கடன் வாங்கியவர்களுக்கு மிக உபயோகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஐசிஐசிஐ வங்கியின் இந்த அதிரடி நடவடிக்கையானது கடன்களுக்கான வட்டி குறைப்பு என்பது வீடு மற்றும் அனைத்து கடன்களுக்கான இஎம்ஐ ஓரளவுக்கு குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு திருத்தப்பட்ட இந்த வட்டி விகிதங்கள் ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. ஒரு ஆண்டுக்கான எம்சிஎல்ஆர் வட்டி விகிதம் 7.45 சதவீதமாக குறைந்துள்ளது. இதே ஓவர் நைட் எம்சிஎல்ஆர் விகிதம் 7.20 சதவீதமாகவும் இனி இருக்கும். சில்லறை கடன்களின் பார்வையில் இந்த எம்சிஎல்ஆர் விகிதம் ஒரு முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil