/tamil-ie/media/media_files/uploads/2020/07/5-25.jpg)
icici loan icici bank loan icicibank
icici loan icici bank loan icicibank : இந்தியாவின் தனியார் வங்கிகளில் இரண்டாவது வங்கியானது ஐசிஐசிஐ வங்கியானது, அனைத்து கடன்களுக்கான வட்டி விகிதத்தினை 10 அடிப்படை புள்ளிகளை குறைத்துள்ளது.
கடந்த 6 மாத காலமாக கொரோனா ஊடரங்கினால் தவித்த மிடில் கிளாஸ் குடும்பங்கள் ஏராளம்.அதிலும் வீடு லோன், கார் லோன், நகை லோன் என பேங் இஎம்ஐ பிரச்சனையில் மாட்டிக் கொண்டவர்கள் ஏராளம். இதில் ஐசிஐசிஐ வாடிக்கையாளர்களுக்கு ஒருநற் செய்தி. வட்டி கடன்களுக்கான வட்டி விகிதம் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி வாடிக்கையாளர்களுக்கு ஏகப்பட்ட குட் நியூஸ் சொன்ன ஐசிஐசிஐ பேங்க் அடுத்து கொடுத்திருக்கும் சூப்பரான தகவல் தான் இது. மிஸ் பண்ணிடாதீங்க.
icici loan icici bank loan icicibank : லோன் வாங்கலாம் ஈஸியா!
ஐசிஐசிஐ வங்கி லோன் கேட்பவர்களுக்கு உடனடியாக எவ்வளவு சீக்கிரம் கொடுக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அளித்து வருகிறது
இந்த நிலையில் விவசாய நிலங்களை வைத்து லோன் கேட்பவர்களுக்கு சாட்டிலைட் மூலம் அவர்களுடைய விவசாய நிலத்தை மதிப்பீடு செய்து உடனடியாக லோன் சாங்சன் செய்து வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவிலேயே முதன்முதலாக சாட்டிலைட்டை பயன்படுத்தி விவசாயப் பெருமக்களுக்கு லோன் கொடுக்கும் முறையை ஐசிஐசிஐ வங்கி தான் ஏற்படுத்தி உள்ளது. சாட்டிலைட் புகைப்படம் மூலம் லோன் கேட்பவர்கள் குறிப்பிடும் நிலத்தை ஆய்வு செய்து அந்த நிலத்தின் மதிப்பீட்டையும் செய்து, அதிகபட்சமாக 15 தினங்களுக்குள் வழங்க ஐசிஐசிஐ வங்கி லோன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
அந்த நிலத்தைப் நேரில் பார்க்க சென்று செல்லும் நேரம், செலவு ஆகியவை குறைவதோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு விரைவில் லோன் கிடைக்கும் இந்த முயற்சி மட்டும் நிஜமானால் கண்டிப்பாக பலரின் பாராட்டுக்களை ஐசிஐசிஐ வங்கி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.