icici net banking online : தனியார் வங்கிகளில் ஐசிஐசிஐ வங்கி அடிக்கடி அறிவிப்புகளை வெளிய்கிடாது. ஆனால் ஒருமுறை வெளியிட்டால் அந்த அறிவிப்பு கண்டிப்பாக வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அல்லது மகிழ்ச்சியை தரும். அந்த வகையில் இப்போது ஐசிஐசிஐ வங்கி அறிவித்திருக்கும் அறிவிப்பு என்னவென்று பார்க்கலாமா?
ஐசிஐசிஐ வங்கியில் நிரந்தர வைப்புநிதிக்கான புதிய வட்டி விகிதம் இந்த மாதம் முதலே அமலுக்கு வந்ததது. இந்த தகவல் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.
ஐசிஐசிஐ வங்கி 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான FD என்னும் நிரந்திர வைப்பு நிதித் திட்டங்களை செயல்பாட்டில் வைத்துள்ளது. இந்த திட்டத்தில் குறிப்பாக இதர வாடிக்கையாளர்களை விட மூத்த வாடிக்கையாளர்களுக்கு 50 பைசா வட்டி அதிகம். இதற்கு முன்னர் கடந்த செப்டம்பர் 20-ம் தேதி நிரந்தர வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் மறுசீரமைப்பு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய புதிய மாற்றத்தின் அடிப்படையில், குறைந்தகால வைப்புகளுக்கான நிரந்தர வைப்பு நிதியில் மாற்றமில்லை. அதாவது 7 நாட்கள் முதல் 14 நாட்க வரையிலான வைப்பு நிதிக்கு 4 சதவிகித வட்டி வழங்கப்படுகிறது. 15 முதல் 29 நாட்களுக்கு 4.25% வட்டி, 30 முதல் 45 நாட்களுக்கு 5% வட்டி வழங்கப்படுகிறது.
இனி சேவிங்ஸ் அக்கவுண்டுக்கு இவ்வளவு தான் வட்டி! கணக்கு போட்டு சொல்லும் எஸ்பிஐ
46 நாட்கள் முதல் 184 நாட்கள் வரையில் 5.50% வட்டி வழங்கப்படுகிறது. 185 முதல் 289 நாட்களுக்கு 6% வட்டி, முதிர்காலம் உடனான வைப்பு நிதி என்றால் 185 முதல் 289 நாட்களுக்கு 6.25% வட்டி வழங்கப்படுகிறது. இந்த மாற்றங்க அனைத்தும் அக்டோபர் 1 ஆம் தேதி முதலே அமலுக்கு வந்தது.
மற்ற வங்கிகள் விவரம:
எச்டிஎப்சி FD வட்டி வகிதம் 3.50%- 6.85%
எஸ்பிஐ வங்கி 4.5% - 6.4%