icici netbanking icicic bank : வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு வங்கியில் அக்கவுண்ட் ஓபன் செய்வது இன்றியமையாத கடமை ஆகும். பென்சன் தொடங்கி உதவி பணம், முதியவர் பணம் என அனைத்து விதமான சேவைகளும் பெற வங்கியில் அக்கவுண்ட் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும்.
Advertisment
பொதுத்துறை வங்கிகளை விடுங்க, தனியார் வங்கிகளில் அதிக லாபம், வட்டி தரக்கூடிய கணக்கை பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள். கண்டிப்பாக பயன் தரும் தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி மூத்த குடிமக்களுக்கு 0.80 சதவீத புள்ளியின் மேம்பட்ட வட்டி வீதத்துடன் ஒரு நிரந்தர வைப்பு தயாரிப்பை அறிவித்தது. முன்பு வங்கிகள் கூடுதல் வட்டியாக 0.50 சதவிகிதத்தை மூத்த குடிமக்களுக்காக வழங்கி வந்தன.
கோவிட்-19 தொற்று பரவல் தொடங்கிய பின்னர் வட்டி விகிதங்கள் கணிசமாக குறைய துவங்கின. பாரத ஸ்டேட் வங்கி மற்றும் ஹெச்டிஎப்சி போன்ற வங்கிகள் வயதானவர்களுக்கு வழங்கும் ப்ரீமியத்தை மேம்படுத்தனர். அதைப்போல் ஐசிஐசிஐ வங்கியும் முதியவர்கள் வங்கி கணக்கில் வட்டியை உயர்த்தி உள்ளது.
ஐசிஐசிஐ வங்கியில் 5 முதல் 10 வருடங்கள் வரையிலான கால அளவில் ரூபாய் 2 கோடிக்கு கீழ் டெப்பாஸிட் செய்யும் மூத்த குடிமக்கள் ஆண்டுக்கு 6.55 சதவிகித வட்டியை பெறுவார்கள். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வங்கி அறிவித்தது குறிப்பிடத்தக்கது. எனவே, பெரியவர்களுக்காக சேமிப்பு கணக்கு அல்லது நிரந்த கணக்கு போன்றவற்றை தொடங்க திட்டமிட்டிருப்பவர்கள் ஐசிஐசிஐ வங்கியை அணுகினால் நல்லது.