/tamil-ie/media/media_files/uploads/2018/12/icici.jpg)
ICICI Bank Latest Tamil News, ICICI Bank ATM Rules, ICICI Bank Rules Corona Outbreak, கொரோனா பாதிப்பு ஐசிஐசிஐ வங்கி அறிவிப்பு
icici netbanking : இந்தியாவின் மிகப் பெரிய தனியார் துறை வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ பேங்க், நெஃப்ட், ஆர்.டி.ஜி.எஸ். யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்களை ரத்து செய்துள்ளது. மற்ற வங்கிகளும் இக்கட்டணங்களை ரத்து செய்வதாக அறிவித்தன.
இந்நிலையில் சென்ற செப்டம்பர் மாதம் ஐசிஐசிஐ வங்கி வெளியிட்டிருந்த அறிவிப்பு ஒன்றில், ஐசிஐசிஐ வங்கிக் கிளைகளில் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறியிருந்தது. அக்கவுண்ட்டில் ஜீரோ பேலன்ஸ் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களிடம் மட்டுமே இக்கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தன.
அந்த அறிவிப்பின் படி (அக்டோபர் 16) முதல் வங்கிக் கிளைகளில் பணம் எடுப்பதற்கு ரூ.100 முதல் ரூ.125 வரையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் வங்கிகளில் பணம் டெபாசிட் செய்வதற்கும் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த அறிவிப்பு ஏற்கனவே நடைமுறைக்கு வந்து விட்ட நிலையில் வாடிக்கையாளர்கள் இதுக் குறித்து தெளிவான் விளக்கம் தெரியாமல் குழம்பி வருகின்றன.
அவர்களுக்காகவே இந்த பதிவு. அதாவது, ஐசிஐசிஐ வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இது பொருந்தாது. வங்கியில் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட், மற்றும் சேலரி அக்கவுண்ட் தொடர்பவர்களுக்கு மட்டுமே இந்த புதிய விதி.
ஒரு நாளைக்கு எஸ்பிஐ ஏடிஎம்-ல் 40 முறை பணம் எடுக்கலாம்! சூப்பர் நியூஸ்ல
நீங்கள் ஐசிஐசிஐ வங்கியின் எந்த கிளையில் அல்லது நீங்கள் அக்கவுண்ட் வைத்திருக்கும் வங்கி என எங்கு பணத்தை டெபாசிட் செய்தாலும் அதற்கு ஒரு குறிப்பிட்ட்ட தொகையை செலுத்த வேண்டும். அதே போல் உங்கள் அக்கவுண்டில் இருந்து நீங்கள் பணம் எடுத்தாலும் அதற்கும் தனி கட்டணம். ஏடிஎம்மில் எடுத்தால் இந்த விதி பொருந்தாது. வங்கிக்கு சென்று நேரில் எடுத்தால் மட்டுமே இந்த விதியும் பொருந்தும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.