வங்கிகளில் கடன் பெறுவது என்பது இந்த காலத்தில் மிகவும் எளிதான ஒன்றாக மாறிவிட்டது. காரணம், வங்கிகளில் பெர்சனல் லோன், ஹோம் லோன், கார் லோன் என ஏகப்பட்ட வசதிகள் வாடிக்கையாளர்களுக்காவும், பொதுமக்களுக்காகவும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அவசரமாக கடன் வேண்டும் என்று வங்கிகளை தொடர்புக் கொண்டால் போதும், 15 நாட்களில் உங்களுக்கு தேவைப்படும் பணம் உங்கள் அக்கவுண்டில் இருக்கும். எஸ்பிஐ தொடங்கி எச்டிஎப்சி, ஆக்சிஸ் என பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் என அனைத்து வங்கிகளிலும் பெர்சனல் லோன் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், அதே நேரத்தில் ஐசிஐசிஐ வங்கி தற்போது அறிமுகப்படுத்தவுள்ள திட்டம் மிக மிக சுலபமான ஒன்று. என்ன தெரியுமா? ஏடிஎம் மெஷின் மூலமாகவே கடன் வழங்கும் திட்டம். ஏடிஎம் சென்றாலே போதும். ஐசிஐசிஐ வங்கி, தனது தகுதியான வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் மெஷின் மூலமாகவே கடனை வழங்குகிறது.
உடனடியாக கடன் தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கு ஐசிஐசிஐ வங்கி வழங்கியிருக்கும் அருமையான வசதி தான் இந்த ஏடிஎம் கடனுதவி சேவை.
எஸ்.பி.ஐ, ஐசிஐசிஐ, எச்டிஎப்சி ஏடிஎம் சேவைக்கு இதுதான் கட்டணம்!
எப்படி பெறுவது?
ஐசிஐசிஐ வங்கி, தனது வாடிக்கையாளர்களில் தகுதியானவர்களை கிரெடிட் அனாலிசிஸ் கம்பெனிகள் மூலமாகத் தேர்வுசெய்து, அவர்களுக்கு ஏடிஎம் மெஷின் மூலமாகவே ரூ.15 லட்சம் வரை ஐந்து வருடத்துக்கான தனிநபர் கடன்களை வழங்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
அதே போல் ஏடிஎம்களில் ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்பட்டு வரும் யூபிஐ செயலியில் உள்ள கியூ.ஆர்.குறியீட்டை ஸ்கேன் செய்து பணம் எடுப்பதற்கான வேலைகள் துரிதமாக நடந்து வருகிறது.
ஸ்மார்ட் போன் வாயிலாக ஏடிஎம்களில் பணம் எடுக்க வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட வங்கிகளில் யூபிஐ செயலிகளை டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும்.
அதன்பின் வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கணினி திரையில் தெரியும் கியூ ஆர்(QR) குறியீட்டினை யூபிஐ மூலம் ஸ்கேன் செய்து அதற்கேற்ற பாதுகாப்பான பின் எண்ணை உள்ளீட்டு வங்கி கணக்கை அணுகுவதன் மூலம் பணத்தை எடுத்துக் கொள்ள முடியும்.
அட எஸ்.பி.ஐ -யில் இப்படி ஒரு வசதியா? இத்தனை நாள் தெரியாம போச்சே!