மக்கள் எதிர்ப்புக்கு பணிந்த பிரபல வங்கி: அதிரடியாக மினிமம் பேலன்ஸ் சலுகை அறிவிப்பு

கடும் எதிர்ப்புகளுக்குப் பிறகு, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி புதிய சேமிப்பு கணக்கு துவங்கும் வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்ச சராசரி இருப்புத்தொகையை ரூ.50,000-ல் இருந்து ரூ.15,000 ஆக குறைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கடும் எதிர்ப்புகளுக்குப் பிறகு, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி புதிய சேமிப்பு கணக்கு துவங்கும் வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்ச சராசரி இருப்புத்தொகையை ரூ.50,000-ல் இருந்து ரூ.15,000 ஆக குறைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
ICICI bank

மக்கள் எதிர்ப்புக்கு பணிந்த பிரபல வங்கி: அதிரடியாக மினிமம் பேலன்ஸ் சலுகை அறிவிப்பு

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கான குறைந்தபட்ச இருப்புத் தொகை (minimum balance) குறித்த அறிவிப்பை திரும்பப் பெற்று, புதிய தொகையை அறிவித்துள்ளது. கடந்த வாரம் வங்கி வெளியிட்ட அறிவிப்புக்குப் பரவலாகக் கண்டனங்கள் எழுந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

கடந்த வாரம் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, ஆகஸ்ட் 1 முதல் புதிய கணக்கு தொடங்கும் வாடிக்கையாளர்கள், தங்கள் வங்கிக் கணக்கில் மாதாந்திர சராசரி இருப்புத் தொகையாக பின்வரும் தொகைகளை வைத்திருக்க வேண்டும் என ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி அறிவித்திருந்தது.

பெருநகரங்கள்: ரூ. 10,000-ல் இருந்து ரூ. 50,000 ஆக உயர்வு.

புறநகர்ப்பகுதிகள்: ரூ. 5,000-ல் இருந்து ரூ. 25,000 ஆக உயர்வு.

கிராமப்புறங்கள்: ரூ. 2,500-ல் இருந்து ரூ. 10,000 ஆக உயர்வு.

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றான ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் இந்த திடீர் உயர்வு, சாமானிய மக்களுக்கு எதிராக இருப்பதாக கூறி பல்வேறு தரப்பினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், சமூகவலைத்தளங்களிலும் இதுகுறித்து பரவலாக பேசப்பட்டது. இது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், இந்த விவகாரத்தில் மத்திய நிதி அமைச்சகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், வாடிக்கையாளர்களின் அதிருப்தியை தொடர்ந்து, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி புதிய சேமிப்பு கணக்கு துவங்கும் வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்ச சராசரி இருப்புத்தொகையை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாக குறைத்து அறிவித்துள்ளது. இது ஏற்கனவே இருந்த குறைந்தபட்ச இருப்புத்தொகையை விட ரூ.5,000 கூடுதலாகும். முன்பு, ரூ.10,000 ஆயிரமாக இருந்தது. வங்கி தனது முந்தைய அறிவிப்பை திரும்ப பெற்று, புதிய குறைந்தபட்ச இருப்புத் தொகையை அறிவித்துள்ளது. அதன்படி: அதேபோல, சிறிய நகரங்களுக்கு 25,000 ரூபாயிலிருந்து 7,500 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. பழைய வாடிக்கையாளர்களுக்கு ரூ.5,000ஆக தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களிலும் ரூ.5,000ஆக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பு, வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

Icici Bank

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: