Advertisment

ஐசிஐசிஐ vs எஸ்பிஐ vs ஹெச்டிஎஃப்சி வங்கி: ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதம் ஒப்பீடு!

ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) ஆகியவற்றின் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் ஒப்பீடு (இந்த வட்டி விகிதங்கள் ரூ.2 கோடிக்கும் குறைவான வட்டி விகிதங்களுக்கு பொருந்தும்).

author-image
WebDesk
New Update
Bank of Baroda launches Mahila Samman Savings Certificate

வங்கி எஃப்.டி.களும் 7.75 சதவிகிதம் வரை கவர்ச்சிகரமான வருமானத்தை வழங்குகின்றன.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கடந்த காலங்களில் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு திட்டங்கள் பணவீக்கத்தை கூட வெல்லவில்லை என்று  விமர்சிக்கப்பட்டன.

இதனால் எதிர்மறையான வருமானம் கிடைத்தது. இருப்பினும், 2022 ஆம் ஆண்டிலிருந்து, ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தத் தொடங்கியது.

இதில் இருந்து, வங்கி எஃப்.டி.களும் 7.75 சதவிகிதம் வரை கவர்ச்சிகரமான வருமானத்தை வழங்குகின்றன.

Advertisment

ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) ஆகியவற்றின் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் ஒப்பீடு (இந்த வட்டி விகிதங்கள் ரூ.2 கோடிக்கும் குறைவான வட்டி விகிதங்களுக்கு பொருந்தும்).

ஐசிஐசிஐ வங்கி

  • 7 நாள்கள் முதல் 14 நாள்கள் வரை: பொது மக்களுக்கு 3.00 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 3.50 சதவீதம்
  • 15 நாள்கள் முதல் 29 நாள்கள் வரை: பொது மக்களுக்கு 3.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு 3.50 சதவீதம்
  • 30 நாள்கள் முதல் 45 நாள்கள் வரை: பொது மக்களுக்கு 3.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு 4.00 சதவீதம்
  • 46 நாள்கள் முதல் 60 நாள்கள் வரை: பொது மக்களுக்கு 4.25 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு 4.75 சதவீதம்
  • 61 நாள்கள் முதல் 90 நாள்கள் வரை: பொது மக்களுக்கு 4.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு 5.00 சதவீதம்
  • 91 நாள்கள் முதல் 120 நாள்கள் வரை: பொது மக்களுக்கு 4.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு 5.25 சதவீதம்
  • 121 நாள்கள் முதல் 150 நாள்கள் வரை: பொது மக்களுக்கு 4.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு 5.25 சதவீதம்
  • 151 நாள்கள் முதல் 184 நாள்கள் வரை: பொது மக்களுக்கு 4.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு 5.25 சதவீதம்
  • 185 நாள்கள் முதல் 210 நாள்கள் வரை: பொது மக்களுக்கு 5.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு 6.25 சதவீதம்
  • 211 நாள்கள் முதல் 270 நாள்கள் வரை: பொது மக்களுக்கு 5.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு 6.25 சதவீதம்
  • 271 நாள்கள் முதல் 289 நாள்கள் வரை: பொது மக்களுக்கு 6.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு 6.50 சதவீதம்
  • 290 நாள்கள் முதல் 1 வருடம் வரை: பொது மக்களுக்கு 6.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு 6.50 சதவீதம்
  • 1 வருடம் முதல் 389 நாள்கள் வரை: பொது மக்களுக்கு 6.70 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு 7.20 சதவீதம்
  • 390 நாள்கள் முதல் 15 மாதங்களுக்கும் குறைவானது: பொது மக்களுக்கு 6.70 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு 7.20 சதவீதம்
  • 15 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு 7.10 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு 7.60 சதவீதம்
  • 18 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 7.10 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு 7.60 சதவீதம்
  • 2 ஆண்டுகள் 1 நாள் முதல் 3 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு 7.50 சதவீதம்
  • 3 ஆண்டுகள் 1 நாள் முதல் 5 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு 7.50 சதவீதம்
  • 5 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு 7.50 சதவீதம்.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

  • 7 நாள்கள் முதல் 45 நாள்கள் வரை: பொது மக்களுக்கு 3.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு 4.00 சதவீதம்
  • 46 நாள்கள் முதல் 179 நாள்கள் வரை: பொது மக்களுக்கு 4.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு 5.25 சதவீதம்
  • 180 நாள்கள் முதல் 210 நாள்கள் வரை: பொது மக்களுக்கு - 5.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு 6.25 சதவீதம்
  • 211 நாட்கள் முதல் 1 வருடம் வரை: பொது மக்களுக்கு 6.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு 6.50 சதவீதம்
  • 1 ஆண்டு முதல் 2 ஆண்டுகளுக்கு குறைவாக: பொது மக்களுக்கு 6.80 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு 7.30 சதவீதம்
  • 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு  7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு 7.50 சதவீதம்
  • 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு 6.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு 7.25 சதவீதம்
  • 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு 6.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு 7.50 சதவீதம்.

ஹெச்டிஎஃப்சி வங்கி

  • 7 நாள்கள் முதல் 14 நாள்கள் வரை: பொது மக்களுக்கு 3.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு 3.50 சதவீதம்
  • 15 நாள்கள் முதல் 29 நாள்கள் வரை: பொது மக்களுக்கு 3.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு 3.50 சதவீதம்
  • 30 நாள்கள் முதல் 45 நாள்கள் வரை: பொது மக்களுக்கு 3.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு 4.00 சதவீதம்
  • 46 நாள்கள் முதல் 60 நாள்கள் வரை: பொது மக்களுக்கு 4.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு 5.00 சதவீதம்
  • 61 நாள்கள் முதல் 89 நாள்கள் வரை: பொது மக்களுக்கு 4.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு 5.00 சதவீதம்
  • 90 நாள்கள் முதல் 6 மாதங்களுக்கும் குறைவானது: பொது மக்களுக்கு 4.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு 5.00 சதவீதம்
  • 6 மாதங்கள் 1 நாள் முதல் 9 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு 5.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு 6.25 சதவீதம்
  • 9 மாதங்கள் 1 நாள் முதல் 1 வருடம் வரை: பொது மக்களுக்கு 6.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு 6.50 சதவீதம்
  • 1 ஆண்டு முதல் 15 மாதங்களுக்கும் குறைவானது: பொது மக்களுக்கு 6.60 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு 7.10 சதவீதம்
  • 15 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு  7.10 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு 7.50 சதவீதம்
  • 18 மாதங்கள் 1 நாள் முதல் 21 மாதங்களுக்கும் குறைவானது: பொது மக்களுக்கு 7.25 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு 7.75 சதவீதம்
  • 21 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு  7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு 7.50 சதவீதம்
  • 2 ஆண்டுகள் 1 நாள் முதல் 2 ஆண்டுகள் 11 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு 7.50 சதவீதம்
  • 2 ஆண்டுகள் 11 மாதங்கள் முதல் 35 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு 7.15 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு 7.65 சதவீதம்
  • 2 ஆண்டுகள் 11 மாதங்கள் 1 நாள் முதல் 3 ஆண்டுகளுக்கு சமம் அல்லது அதற்கும் குறைவானது: பொது மக்களுக்கு 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு 7.50 சதவீதம்
  • 3 ஆண்டுகள் 1 நாள் முதல் 4 ஆண்டுகள் 7 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு 7.50 சதவீதம்
  • 4 ஆண்டுகள் 7 மாதங்கள் முதல் 55 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு 7.20 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு 7.70 சதவீதம்
  • 4 ஆண்டுகள் 7 மாதங்கள் 1 நாள் முதல் 5 ஆண்டுகளுக்கு குறைவாக அல்லது அதற்கு சமம்: பொது மக்களுக்கு 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு 7.50 சதவீதம்
  • 5 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு 7.75 சதவீதம்.

பொதுவாக, குறிப்பிட்ட 5 ஆண்டுகள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும். இதை வங்கிகளில் ஆலோசித்து அறிந்துக்கொள்வது நல்லது.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Fixed Deposits
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment