ஐடிபிஐ வங்கி ரூ.2 கோடிக்கு கீழ் உள்ள நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதங்களை மாற்றியுள்ளது.
மேலும், 444 நாள்கள் கால ஒரு புதிய “அம்ரித் மஹோத்சவ் FD” திட்டத்தையும் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
அம்ரித் மஹோத்சவ் ஃபிக்ஸட் டெபாசிட்
444 நாள்களில் அம்ரித் மஹோத்சவ் ஃபிக்ஸட் டெபாசிட் (FD) திட்டத்தின் கீழ், வங்கி பொது, NRE மற்றும் NRO க்கு 7.15% வட்டி விகிதத்தை வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு, வங்கி 7.65% வழங்குகிறது.
ஃபிக்ஸட் டெபாசிட் கால அளவு | பொது | மூத்தக் குடிமக்கள் |
0-6 நாள்கள் | NA | NA |
15-30 நாள்கள் | 3 | 3.5 |
31-45 நாள்கள் | 3 | 3.5 |
40-60 நாள்கள் | 3.35 | 3.85 |
91-6 மாதம் | 4.25 | 4.75 |
61-90 மாதங்கள் | 4.25 | 4.75 |
5 ஆண்டுகள் | 6.25 | 6.75 |
5-7 ஆண்டுகள் | 6.25 | 6.75 |
7-10 ஆண்டுகள் | 6.25 | 6.75 |
10-20 ஆண்டுகள் | 4.8 | 5.30 |
6 மாதங்கள், 1 நாள் முதல் 1 வருடம் வரையிலான முதிர்வு கால டெபாசிட்டுகளுக்கு 5.50% வட்டியும், 1 வருட முதிர்வு உள்ளவைகளுக்கு வட்டியும் கிடைக்கும்.
மேலும் இந்தத் திட்டத்தில் முன்கூட்டியே மூடப்பட்ட டெபாசிட்டுகளுக்கு உரிய விகிதத்தில் வங்கி 1% அபராதம் விதிக்கும். ஸ்வீப்-இன் திரும்பப் பெறுதல் மற்றும் பகுதியளவு திரும்பப் பெறுதல் ஆகியவை அத்தகைய மூடல்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“