ஃபிக்ஸட் டெபாசிட் வட்டியை திருத்திய ஐடிபிஐ வங்கி: புதிய வட்டியை செக் பண்ணுங்க!

ஐடிபிஐ வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை திருத்தியுள்ளது. அத்துடன் 444 நாள்கள் சிறப்பு எஃப்.டி திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஐடிபிஐ வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை திருத்தியுள்ளது. அத்துடன் 444 நாள்கள் சிறப்பு எஃப்.டி திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
Unity Small Finance Bank latest FD interest rates

ஐடிபிஐ வங்கி செப்.17ஆம் தேதி சிறப்பு எஃப்.டி திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

IDBI Bank Special FD Scheme: ஐடிபிஐ வங்கி ரூ.2 கோடிக்கும் குறைவான ஃபிக்ஸட் டெபாசிட் தொகைகளுக்கு (எஃப்டி) வட்டி விகிதத்தை மாற்றியுள்ளது. இந்தத் திருத்தத்தைத் தொடர்ந்து, ஒரு வருடம் முதல் 2 ஆண்டுகள் வரையிலான (375 நாள்கள் மற்றும் 444 நாள்கள் தவிர), எஃப்.டி.களுக்கு பொது மக்களுக்கு அதிகபட்சமாக 6.80% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.30% வருமானத்தை வங்கி உறுதியளிக்கிறது.

Advertisment

7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்களின் காலப்பகுதியில், ஐடிபிஐ வங்கி பொது மக்களுக்கு 3.00% முதல் 6.25% வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 3.50% முதல் 6.75% வரையிலும் வட்டி விகிதங்களை வழங்குகிறது. ஐடிபிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, சமீபத்திய எஃப்.டி வட்டி விகிதங்கள் செப்டம்பர் 15, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளன.

வட்டி விகிதங்கள்

அந்த வகையில், 7 முதல் 30 நாள்களில் முதிர்ச்சியடையும் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 3.00 சதவீத வட்டியும், 31 முதல் 45 நாள்களில் முதிர்ச்சியடையும் எஃப்.டி.களுக்கு 3.25% வட்டி விகிதமும், 46-90 நாள்கள் கொண்ட எஃப்.டி.களுக்கு, 4.00% வட்டி விகிதமும், 91-6 மாதங்கள் வரையிலான எஃப்.டி.களுக்கு 4.50% வட்டியையும் வழங்குகிறது.

Advertisment
Advertisements

தொடர்ந்து, 6 மாதங்கள், 1 நாள் முதல் 270 நாள்கள் வரை முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் தற்போது 5.75% ஆகவும், 271 நாள்கள் முதல் 1 வருடத்தில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 6.25% ஆகவும் உள்ளது.

மேலும், 1 வருடம் முதல் 2 ஆண்டுகள் வரை (375 நாள்கள் மற்றும் 444 நாள்கள் தவிர) முதிர்ச்சியடையும் ஃபிக்ஸட் டெபாசிட்கள், 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்களுக்கு 6.80% வட்டி வழங்குகிறது.
மேலும், 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு 6.25% வருமானம் கிடைக்கும்.

சிறப்பு திட்டம் அறிமுகம்

ஐடிபிஐ வங்கி 444 நாள்கள் சிறப்பு கால வைப்பு திட்டத்தை செப்.15ஆம் தேதி அறிமுகப்படுத்தியது. இதில் பொதுமக்களுக்கு 7.25 சதவீதம் வட்டியும், மூத்தக் குடிமக்களுக்கு 7.75 சதவீத வட்டியும் கிடைக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

IDBI

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: