ஐ.டி.பி.ஐ., வங்கி தனியார் மயமாக போகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.பொதுவாக ஐ.டி.பி.ஐ வங்கி பங்குகள் மத்திய அரசு மற்றும் எல்.ஐ.சி.,யிடம் அதிகமாக உள்ளன.
அந்த வகையில் எல்.ஐ.சி., 49.24 சதவீத பங்குகளையும், மத்திய அரசு 45.48 சதவீத பங்குகளையும் வைத்துள்ளன. இந்த நிலையில் எல்.ஐ.சி., வசமுள்ள பங்குகள் விற்பனை ஆகலாம் எனத் தெரிகிறது.
1964ஆம் ஆண்டு தொழிற்துறைக்கு கடன் மற்றும் இதர உதவிகள் அளிக்கும் வகையில் ஐ.டி.பி.ஐ., வங்கி உருவாக்கப்பட்டது. இந்த நிலையில் வங்கி தற்போது தனியார்மயமாக்கப்பட உள்ளது.
முன்னதாக எல்.ஐ.சி, பங்கு விற்பனை மூலம் ரூ.25, 544 கோடி திரட்டியிருந்தது.
அதேபோல், மத்திய அரசு பங்கு விற்பனை மூலம் 65 ஆயிரம் கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது. நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிறுவனங்களை தனியார் மயமாக்க மத்திய அரசு ஏற்கனவே திட்டம் தீட்டியுள்ளது.
அந்த வகையில், ஷிப்பிங் கார்ப், வைஷாக் ஸ்டீல், பி.இ.எம்.எல், ஹெச்.எல்.எல் லைஃப் கேர் உள்ளிட்ட நிறுவனங்களையும் தனியார் மயமாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“