எஃப்.டி வட்டியை உயர்த்திய ஐ.டி.பி.ஐ வங்கி: புதிய வட்டி விகிதம்: முழு லிஸ்ட்!
ஐ.டி.பி.ஐ வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை திருத்தியுள்ளது. இந்தப் புதிய வட்டி விகிதங்கள் ரூ.2 கோடிக்கும் குறைவான முதலீடுக்கு பொருந்தும்.
Fixed Deposits | ஐ.டி.பி.ஐ வங்கி ரூ. 2 கோடிக்கும் குறைவான தொகைக்கான டெர்ம் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களைத் திருத்தியுள்ளது. மேலும், குறிப்பிட்ட காலப்பகுதியில் உத்சவ் எஃப்டியின் நிலையான வைப்பு வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளது என்று வங்கி இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Advertisment
ஐ.டி.பி.ஐ வங்கியானது வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு ஏழு நாள்கள் முதல் பத்து வருடங்களில் முதிர்ச்சியடையும் எஃப்டிகளுக்கு 3% முதல் 7% வரையிலான வட்டி விகிதங்களை வழங்குகிறது.
மேலும், ரூ.2 கோடிக்கும் குறைவான தொகைக்கு அழைக்கக்கூடிய டெபாசிட்களுக்கு 3.5% முதல் 7.5% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது.
வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள்
எண்
காலம்
வட்டி விகிதம் பொது (%)
மூத்தக் குடிமக்கள் (%)
01
0-6 நாள்கள்
-
-
02
07-30 நாள்கள்
3.00%
3.50%
03
31-45 நாள்கள்
3.25%
3.75%
04
46-60 நாள்கள்
4.25%
4.75%
05
61-90 நாள்கள்
4.5%
5.00%
06
91-6 மாதம்
5.25%
5.75%
07
6 மாதம் 1 நாள் 270 நாள்கள்
5.75%
6.25%
08
6 மாதம் 1 நாள் 270 நாள்கள்
5.75%
6.25%
09
271 நாள்கள் முதல் 1 ஆண்டு (300 நாள்கள் நீங்கலாக)
6.25%
6.75%
10
1- 2 ஆண்டுகள் (375 மற்றும் 444 சிறப்பு திட்டங்கள் நீங்கலாக)
6.80%
7.30%
11
2 ஆண்டுக்கு மேல் 3 ஆண்டுக்குள்
7.00%
7.50%
12
3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள்
6.50%
7.00%
13
5 ஆண்டுக்கு மேல் 10 ஆண்டுக்குள்
6.25%
7.75%
14
10 ஆண்டுக்கு மேல் 20 ஆண்டுக்குள்
4.8%
5.30%
15
5 ஆண்டு வரி சேமிப்பு எஃப்டி
6.50%
7.00%
உத்சவ் எஃப்.டி 300 நாள்கள்
வங்கி மூத்த குடிமக்களுக்கு 7.55% வழங்குகிறது. மேலும், வழக்கமான, என்.ஆர்.இ மற்றும் என்.ஆர்.ஓ வாடிக்கையாளர்களுக்கு 300 நாள்கள் உத்சேவ் எஃப்டியின் கீழ் 7.05% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
உத்சவ் எஃப்.டி 375 நாள்கள்
ஐ.டி.பி.ஐ வங்கி மூத்த குடிமக்களுக்கு 7.60% வழங்குகிறது. வழக்கமான, என்.ஆர்.இ மற்றும் என்.ஆர்.ஓ (NRO) வாடிக்கையாளர்களுக்கு 375 நாள்கள் எஃப்.டி திட்டத்தின் கீழ் 7.10% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“