அதிர வைக்கும் ஐடியா - வின் அளவில்லா வாய்ஸ் காலிங் சேவை!

அளவில்லாத வாய்ஸ் காலிங் சேவையை 14 நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ள்து.

ஜியோ, ஏர்டெலை தொடர்ந்து ஐடியா நிறுவனமும் தற்போது அளவில்லா வாய்ஸ் காலிங் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

டெலிகாம் சந்தைகளில் நிலவி வரும் போட்டியால் முன்னணி நிறுவனங்கள் பல தங்களின் ரீசார்ஜ் திட்டங்களை அவ்வப்போது மாற்றிக்கொண்டே வருகின்றன. குறிப்பாக ஜியோவின் வருக்கைக்கு பின்னர், ஏர்டெல், வோடஃபோன், ஏர்செல் போன்ற நிறுவனங்கள் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களில், வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் அதிக சலுகைகளை அறிவித்தன. டெலிகாம் நிறுவனங்களின் இந்த போட்டி வாடிக்கையாளர்களுக்கு பயனை தேடிய தந்தது.

ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்திய ரீசார்ஜ் திட்டங்களில் கேஸ்பேக் ஆஃபர், கிஃப்ட் வவுச்சர்கள், ரீசார்ஜ் கூப்பன்கள் போன்ற சலுகையில் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று தந்தனர். இதனையடுத்து, ஜியோவுடன் போட்டியில் குதித்த மற்ற நிறுவனங்கள்., வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள நாள் ஒன்றுக்கு அதிக டேட்டா, அளவில்லாத வாய்ஸ் காலிங் சேவை போன்ற திட்டங்களை முன்னிலை படுத்தினர்

அந்த வகையில், ஐடியா நிறுவனமும் தற்போது அளவில்லா வாயிஸ் காலிங் சேவையை சந்தைக்கு கொண்டுள்ளது. அதன் படி, ஐடியா நிறுவனத்தின் ரூ. 109 ரீசார்ஜ் திட்டத்தின் கீழ் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா, நாள் ஒன்றுக்கு 100 இலவச குறுங்செய்திகள் அளவில்லாத வாய்ஸ் காலிங் சேவையை 14 நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ள்து.

மேலும், ஐடியாவின் இந்த புதிய திட்டம், தற்போது டெல்லி, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, ஹரியான போன்ற மாநிலங்களில் மட்டுமே அறிமுகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close