ஐடியா நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ரூ. 499 க்கு ரீசார்ஜ் திட்டத்தில் புதிய அறிவிப்பை அறிவித்துள்ளது.
டெலிகாம் சந்தையில் ஒருகாலத்தில் ஐடியா நிறுவனம் மிகப்பெரிய உச்சந்த்தில் இருந்தது. ஐடியாவின் விளம்பர தூதவராக அபிஷேக் பச்சன் போன்ற நடிகர், நடிகைகளும் இருந்துள்ளனர். இந்நிலையில், டெலிகாம் மார்கெட்டில் ஜியோ காலடி எடுத்து வைத்தது.
ஜியோவின் வருகைக்கு முன்னணி நிறுவனங்களாக இருந்த ஏர்டெல், ஏர்செல், வோடஃபோன், ஐடியா நிறுவனங்களும் சந்தையில் தோல்வியை தழுவின. 2ஜி வாடிக்கையாளர்கள் கூட அதி வேகத்தில் 4ஜி க்கு மாறினார்.
ஜியோவின் அறிவிப்புகள், சலுகைகள் பொதுமக்களை வெகுளவில் கவர்ந்தன. அதன் பின்பு தான் மற்ற நிறுவனங்களும் ஜியோவின் வழியை பின்பற்ற தொடங்கினர். இருந்த போதும் ஏர்டெல் நிறுவனத்தால் போட்டியை சமாளிக்க முடியாமல் கடையை இழுத்து மூடியது.
பிஎஸ் என் எல், ஐடியா போன்ற நிறுவனங்கள் தனக்கென தனி வாடிக்கையாளர்க்ளை வைத்து கொண்டு இயங்கி வருகிறது. இந்நிலையில் ஜியோ மற்றும் மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் ரீசார்ஜ் திட்டத்திற்கு போட்டியாக ரூ. 499 க்கு பிரீப்பெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
82 நாட்கள் வெலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு மொத்தமாக 164ஜிபி டேட்டா வழங்குகிறது.நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம். அத்துடன் அளவில்லாத காலிங் சேவை மற்றும் நாள் ஒன்றுக்கு 100 இலவச குறுங்செய்திகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.