ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் வங்கி சேமிப்பு கணக்குகள் மற்றும் ரூ.2 கோடிக்கு கீழ் உள்ள ஃபிக்ஸட் டெபாசிட் விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் இப்போது சேமிப்பு வங்கி டெபாசிட்டுகளுக்கு 7.25% வரையிலும், நிலையான வைப்புகளுக்கு 7.90% வரையிலும் வட்டி பெறலாம். அதிக வட்டி விகிதங்கள் மே 15, 2024 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது என்று வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் கூறுகிறது.
சேமிப்பு கணக்கு வட்டி
2024 மே 15 முதல், வங்கி சேமிப்புக் கணக்கு இருப்புகளுக்கு 3.00% வட்டி விகிதத்தை வழங்குகிறது. அதன்படி, ரூ. 1 லட்சம் இருப்புகளுக்கு வங்கி 3.50% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
மேலும், ரூ.3 லட்சம் - ரூ.5 லட்சம் வரையிலான பணம் நிர்வகிக்கப்படும் சேமிப்பு கணக்குக்கு 7 சதவீதம் வட்டி வழங்குகிறது. ரூ.10 லட்சம்- ரூ.5 கோடி வரையிலான சேமிப்பு கணக்குக்கு 7.25 சதவீதம் வட்டி வழங்கப்படும்.
ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதம்
மே 15 ஆம் தேதி நிலவரப்படி, 7 - 45 நாள்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்களுக்கு வங்கி 3.00% வட்டி விகிதத்தை வழங்குகிறது. 46 முதல் 180 நாட்களில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு வங்கி 4.50% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
181 நாள்கள் அல்லது ஒரு வருடத்திற்கும் குறைவான காலப்பகுதியில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு வங்கி 5.75% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
அதே நேரத்தில் ஐ.டி.எஃப்.சி ஃபரஸ்ட் வங்கி ஒரு வருடத்தில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 6.50% வட்டி விகிதத்தை வழங்குகிறது. ஒரு வருடம் மற்றும் ஒரு நாள் முதல் 499 நாட்கள் வரையிலான வைப்புத் தொகைக்கு வங்கி 7.50% வட்டி வழங்கும்.
500 நாள்கள் கால டெபாசிட்ளுக்கு வங்கி 7.90% வட்டி வழங்கும். 501 நாள்கள் முதல் 548 நாள்கள் வரை முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 7.50% ஆகும்.
அதே நேரம், 549 நாட்கள் முதல் 2 ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 7.75% ஆகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“