ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் வங்கி எஃப்.டி வட்டி விகிதங்கள் திருத்தம்: புதிய வீதம் தெரியுமா?
திய எஃப்.டி வட்டி விகிதங்கள் மே 15, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன. வங்கி தற்போது 3% முதல் 7.90% வரையிலான வட்டி விகிதங்களை பொதுக் குடிமக்களுக்கு 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு வழங்குகிறது.
ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் (IDFC FIRST) வங்கி அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, ரூ.2 கோடிக்கும் குறைவான தொகை மற்றும் சேமிப்புக் கணக்கு வட்டி விகிதங்கள் மீதான நிலையான வைப்பு வட்டி விகிதங்களைத் திருத்தியுள்ளது. புதிய எஃப்.டி வட்டி விகிதங்கள் மே 15, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து, வங்கி தற்போது 3% முதல் 7.90% வரையிலான வட்டி விகிதங்களை பொதுக் குடிமக்களுக்கு 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு வழங்குகிறது.
Advertisment
மூத்த குடிமக்களுக்கு, வங்கி 0.50% ஆண்டுக்கு கூடுதல் பரவலை வழங்குகிறது. அதிகபட்ச வட்டி விகிதம் 8% மற்றும் 8.40% 500 நாள்களுக்கு வழங்கப்படுகிறது.
டெபாசிட் காலம்
வட்டி விகிதம் (%)
7-14 நாள்கள்
3.00%
15-29 நாள்கள்
3.00%
30-45 நாள்கள்
3.00%
46-90 நாள்கள்
4.50%
91-180 நாள்கள்
4.50%
181-1 ஆண்டுக்குள்
5.75%
1 ஆண்டு
6.50%
1 ஆண்டு 1 நாள்-499 நாள்கள்
7.50%
500 நாள்கள்
7.90%
510 நாள்கள்-548 நாள்கள்
7.50%
549 நாள்கள்
7.75%
2 ஆண்டு 1 நாள்
7.25%
3 ஆண்டு 1 நாள்
7.00%
5 ஆண்டு 1 நாள்
7.00%
5 ஆண்டு டெபாசிட் (வரி சேமிப்பு எஃப்டி)
7.00%
சேமிப்பு கணக்கு வட்டி விகிதம்
சேமிப்பு
வட்டி வகிதம்
ரூ.1 லட்சம்
3.00%
ரூ.1-3 லட்சம்
3.50%
ரூ.3-5 லட்சம்
4.00%
ரூ.5-10 லட்சம்
7.00%
ரூ.10 லட்சம்- ரூ.5 கோடி
7.25%
ரூ.5 கோடி- ரூ.50 கோடி
7.00%
ரூ.50 கோடி- ரூ.100 கோடி
5.00%
ரூ.100 கோடி -ரூ.200 கோடி
4.50%
ரூ.200 கோடிக்கும் மேல்
3.50%
அதாவது ரூ.25 ஆயிரம் வங்கிக் கணக்கில் இருந்தால் வாடிக்கையாளருக்கு 3 சதவீதம் வட்டி கிடைக்கும். அதேநேரத்தில், உங்கள் கணக்கில் இருப்பு ரூ. 50 லட்சமாக இருந்தால், உங்களுக்கு செலுத்த வேண்டிய வட்டி ரூ. 3% ஆக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“