முன்னணி தனியார் துறை வங்கிகளில் ஒன்றான ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் வங்கி, நிலையான வைப்பு முதலீட்டாளர்களுக்கு ஒரு முக்கியமான வட்டி உயர்வை அறிவித்துள்ளது.
அதாவது, ரூ.2 கோடிக்கும் குறைவான நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதத்தை வங்கி உயர்த்தியது.
ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸட் வங்கி வட்டி விகிதம்
ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸட் வங்கி 7 முதல் 45 நாள்களில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 3% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
அதே சமயம் ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸட் வங்கி (IDFC First Bank) 46 முதல் 180 நாள்களில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 4.50% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
181 நாள்கள் முதல் ஒரு வருடத்திற்கும் குறைவான டெபாசிட் காலத்திற்கு, ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸட் வங்கி 5.75% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
ஒரு வருட டெபாசிட் காலத்திற்கு வட்டி விகிதம் 6.50% ஆகும். ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் பேங்கில் 1 வருடம், 1 நாள் முதல் 499 நாள்கள் வரை முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் தற்போது 7.50% ஆக இருக்கும்.
அதே சமயம் 500 நாள்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளின் அதிகபட்ச வருவாய் விகிதம் 8% ஆக இருக்கும்.
501 நாள்கள் - 548 நாள்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்களுக்கு வங்கி 7.50% வட்டி விகிதத்தையும், 549 நாள்கள் - 2 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் எஃப்.டி.-க்களுக்கு 7.75% வட்டி விகிதத்தையும் வழங்கும்.
தொடர்ந்து, 2 ஆண்டுகள் 1 நாள் - 3 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் திட்டங்களுக்கு 7.25% வட்டி விகிதத்தையும், 3 ஆண்டுகள் 1 நாள் - 5 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் திட்டங்களுக்கு 7.00% வட்டி விகிதத்தையும் வழங்கும்.
வரி சேமிப்பு திட்டம்
மேலும், 5 ஆண்டுகள் 1 நாள் - 10 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் நீண்ட கால வைப்புகளுக்கு 7.00% வட்டி விகிதத்தையும் வழங்குகிறது.
5 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் வரி-சேமிப்பு வைப்புகளுக்கு, வங்கி 7.00% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“