ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி ரூ.2 கோடிக்கும் குறைவான நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதங்களைத் திருத்தியுள்ளது. இந்தப் புதிய வட்டி விகிதங்கள் ஜூலை 1, 2023 முதல் பொருந்தும்.
புதிய வட்டி விகிதங்கள்
வங்கி இப்போது 7 முதல் 29 நாள்களில் முதிர்ச்சியடையும் நிலையான வைப்புகளுக்கு 3.50% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
அதே சமயம், 30 முதல் 45 நாள்களில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 4.00% வட்டி விகிதத்தை வழங்குகிறது. 46 முதல் 90 நாள்கள் வரையிலான டெபாசிட்களுக்கு 4.50 சதவீதம் வட்டி கிடைக்கும்.
மேலும் 91 முதல் 180 நாள்கள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு இப்போது 5.00% என்ற விகிதத்தில் வட்டி கிடைக்கும்.
தொடர்ந்து, 181 முதல் 366 நாள்களுக்குள் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு இப்போது 6.50% வட்டி கிடைக்கும். அதே சமயம் 1 வருடம் 1 நாள் முதல் 550 நாள் வரை முதிர்ச்சியடைபவை இப்போது 7.50% வட்டியைப் பெறும்.
மேலும், 551 நாள்கள் முதல் 2 ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 7.25% வட்டி விகிதம் கிடைக்கும்.
வங்கி இப்போது 2 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் நிலையான வைப்புகளுக்கு 7.25% வட்டி விகிதத்தை வழங்குகிறது. மூத்த குடிமக்கள் மேற்கூறிய விகிதத்தை விட 0.50% கூடுதல் விகிதத்தை பெறுவார்கள்.
அதிக வட்டி
1 வருடம் 1 நாள் முதல் 550 நாள் வரையிலான காலக்கட்டத்தில் அதிகபட்சமாக 8% வட்டியைப் பெறலாம். ஃபிக்சட் டெபாசிட்டை முதிர்வுக்கு முன் மூடுவதற்கான அபராதம் 1% ஆக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“