Post office RD | இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் மிகச்சிறந்த முதலீட்டு கருவியாக பார்க்கப்படுகின்றன. இந்தப் ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டை அஞ்சலகங்கள், வங்கிகள், தனியார் மற்றும் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகளும் வழங்குகின்றன.
இந்தத் திட்டங்களில் முதலீட்டாளர் ஒரு மொத்த தொகையை முதலீடு செய்ய வேண்டும். இந்த முதலீட்டிற்கான வட்டி வருவாயை சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்கள் முதலீட்டாளரின் கணக்கில் மாதம், காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு என்ற விருப்ப தேர்வுகளில் செலுத்தும்.
இந்தத் திட்டத்திற்கு மாற்றாக உள்ளது. ரெக்கரிங் டெபாசிட் எனப்படும் இந்த ஆர்.டி திட்டத்தில் முதலீட்டாளர்கள் மாதந்தோறும் ஒரு சிறிய தொகையை சேமிப்பு, முதிர்ச்சியின்போத ஒரு பெரிய தொகையை உருவாக்க முடியும்.
இதற்கு கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களும் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் போஸ்ட் ஆபிஸில் 5 ஆண்டு ஆர்.டி முதலீட்டுக்கு 6.7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
மாதம் ரூ.5 ஆயிரம் முதலீடு
இந்தத் திட்டத்தில் மாதம் ரூ.5 ஆயிரம் வீதம் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் ரூ.3 லட்சம் முதலீடு செய்து இருப்போம். இதில் 6.7 சதவீதம் வட்டி கணக்கீடப்படும். அந்த வகையில் வட்டியாக மட்டும் ரூ.56,830 கிடைக்கும்.
ஆக முதிர்வின்போது ரூ.5 லட்சம் முதலீடு மற்றும் வட்டி ரூ.56,830 உடன் சேர்த்து ரூ.3 லட்சத்து 56 ஆயிரத்து 830 கிடைக்கும். அஞ்சலகத்தில் தற்போதைய வட்டி விகிதத்தின்படி எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பது மேலே கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“