public-provident-fund | முதலீட்டாளர்கள் பிபிஎஃப் (PPF) இல் வெறும் 500 ரூபாயில் முதலீடு செய்யத் தொடங்கலாம். அதே நேரத்தில் ஒரு வருடத்தில் அதிகபட்சமாக 1.5 லட்சம் முதலீடு செய்யலாம்.
இந்தத் திட்டத்தில் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். முதிர்ச்சியடைந்த பிறகும், முதலீட்டை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும்.
ரூ.42 லட்சம் ரிட்டன் பெறுவது எப்படி?
இநதத் திட்டத்தில் முதலீட்டாளர் ஒவ்வொரு மாதமும் ரூ.5000 சேமிப்பதன் மூலம் 42 லட்சம் ரூபாய் நிதியை எப்படி திரட்ட முடியும்? என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
இந்தத் திட்டத்தில் முதலீட்டுக்கு 7.1 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. ஆக, மாதம் ரூ.5000 டெபாசிட் செய்வதன் மூலம், ஒரு வருடத்தில் ரூ.60,000 பிபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.
15 ஆண்டுகளில் டெபாசிட் செய்யப்பட்ட மொத்தத் தொகை ரூ.9,00,000 ஆகிவிடும். நீங்கள் டெபாசிட் செய்த தொகைக்கு நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதத்தின்படி, வட்டி ரூ.7,27,284 ஆக இருக்கும்.
ரூ.26 லட்சம் வட்டி வருமானம்
அதாவது அதுவரை உங்கள் டெபாசிட் ஃபண்ட் ரூ.16,27,284 ஆக இருக்கும். இப்போது நீங்கள் இந்த நிதியை 5-5 ஆண்டுகளுக்கு நீட்டித்தால், உங்கள் மொத்த டெபாசிட் நிதியும் அதற்கேற்ப அதிகரிக்கும்.
அதாவது, 10 ஆண்டுகளுக்கு அதாவது 25 ஆண்டுகளுக்குப் பிறகு, நீங்கள் டெபாசிட் செய்த தொகையின் வட்டியும் சேர்த்து மொத்த நிதி ரூ.42 லட்சமாக இருக்கும்.
இந்த 25 வருட காலத்தில் வட்டி வருமானம் மட்டும் ரூ.26,00,000 லட்சத்துக்கு மேல் கிடைக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“