/indian-express-tamil/media/media_files/Scjgz4x6bvzwgC6Qm9fP.jpg)
தமிழ்நாட்டில் 40 புதிய கிளைகளை துவங்குவதோடு 250க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க உள்ளதாக IIFL தெரிவித்துளளது.
IIFL தங்க நகைக் கடன், வணிகக் கடன் தொடர்பாக வங்கி வசதி குறைவாக உள்ள மற்றும் வங்கி வசதியே இல்லாத இடங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சேவையை வழங்கும் வகையில் புதிய கிளைகள் தொடங்க இருப்பதாகவும், தமிழ்நாட்டில் 40 புதிய கிளைகளை துவங்குவதோடு 250க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க உள்ளதாக தெரிவித்துளளது.
இந்தியாவின் முன்னணி வங்கி அல்லாத நிதி நிறுவனமான ஐ.ஐ.எஃப்.எல் பைனான்ஸ் தமிழ்நாடு முழுவதும் உள்ள பல நகரங்கள், சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்கள் என 177 கிளைகளை கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்நிறுவனம் தனது சேவையை விரிவு படுத்தும் விதமாக 400"க்கும் மேற்பட்ட புதிய கிளைகளைத் திறக்கவும் அடுத்த ஓராண்டில் 250க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியமர்த்தவும் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.
ஐ.ஐ.எப்.எல். பைனான்ஸ் தங்கநகைக் கடன்கள் பிரிவின் தலைவர் சவுரப் குமார் மற்றும் தமிழக மண்டல வர்த்தக தலைவர் கார்த்திக் ஆகியோர் பேசினார்கள்.
அப்போது அவர்கள் கூறுகையில், “தங்க நகைக் கடன் மற்றும் வணிகக் கடன் தொடர்பாக வங்கி வசதி குறைவாக உள்ள மற்றும் வங்கி வசதியே இல்லாத இடங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சேவையை வழங்க உள்ளோம்.
இதறகாக புதிய கிளைகள் தொடங்க உள்ளோம். தங்க நகைகள் வைத்திருப்பதிலும் வாங்குவதிலும் இந்தியாவிலேயே தமிழகம் முக்கிய மாநிலமாக திகழ்கிறது.
தொடர்ந்து, “எங்கள் கிளைகள் அனைத்திலும் காகிதமில்லா செயல்முறையைப் பின்பற்றுவதாகவும் இதனால் அனைத்து வகையான கடன்களையும் விரைவாக செயலாக்கி வாடிக்கையாளர்களுக்கு சரியான நேரத்தில் வழங்குவதாக தெரிவித்தனர்.
மேலும் தற்போது 40 கிளைகள் உருவாகுவதால் 250 பேருக்கு வேலைவாய்ப்பு எனவும் வருங்காலத்தில் 2500 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் எனவும் கூறினார்கள்.
செய்தியாளர் பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.