பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்த ஐ.எம்.எஃப்: கடன் வழங்க 11 புதிய நிபந்தனைகள் விதிப்பு

பாகிஸ்தானுக்கு கடன் வழங்க மேலும் 11 புதிய நிபந்தனைகளை விதித்து சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எப்.,) அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவுடன் பதற்றத்தை அதிகரிக்கச் செய்யும் செயல்களில் பாக்., ஈடுபடக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு கடன் வழங்க மேலும் 11 புதிய நிபந்தனைகளை விதித்து சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எப்.,) அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவுடன் பதற்றத்தை அதிகரிக்கச் செய்யும் செயல்களில் பாக்., ஈடுபடக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IMF

11 புதிய நிபந்தனைகள் விதிப்பு; பாக்., தலையில் இடியை இறக்கிய ஐ.எம்.எப்.!

காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தானுக்கு ரூ.8,350 கோடி நிதியுதவி அளிப்பதாக ஐ.எம்.எப்.எனப்படும் சர்வதேச நாணய நிதியம் அறிவித்தது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பாகிஸ்தானுக்கு ஒருபில்லியன் டாலர் நிதி உதவி வழங்கும் முடிவை, ஐ.எம்.எப்., மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருந்தார். இந்நிலையில், 2-ம் கட்ட கடனுதவி வழங்க பாகிஸ்தானுக்கு 11 புதிய நிபந்தனைகளை ஐ.எம்.எப்., விதித்திருப்பது நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக IMF வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவுடனான பதற்றம் அதிகரித்து வருவதால் பாகிஸ்தானுக்கு தொழில் அபாயம் அதிகரித்துள்ளதாகவும், இந்தியாவுடன் பதற்றத்தை அதிகரிக்கச் செய்யும் செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Advertisment

11 புதிய நிபந்தனைகள்:

1.சர்வதேச நாணய நிதியத்தின் கட்டுப்பாடுகளுக்கு இணங்கி 2026 நிதியாண்டின் பட்ஜெட்டிற்கு ஒப்புதல் பெற வேண்டும். 2025-ம் ஆண்டு ஜூன் இறுதிக்குள் செய்திருக்க வேண்டும்.

2. வரி செலுத்துவோர்களை அடையாளம் காணுவது, பதிவு செய்வது, அவர்களிடம் உரிய வரி வசூலிப்பது, விழிப்புணர்வு பிரசாரங்கள் ஆகியவற்றை மேற்கொள்ள தனித்தனியாக 4 குழுக்களை ஜூன் மாதத்திற்குள் அமைக்க வேண்டும்.

3. சர்வதேச நாணய நிதியம் அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் அரசு ஒரு நிர்வாக செயல் திட்டத்தை வெளியிட வேண்டும்.

4. 2027ம் ஆண்டிற்கு பிறகு நிதியை எப்படிக் கையாள வேண்டும் என்பது குறித்து அறிக்கையை பாக்., அரசு உருவாக்க வேண்டும்.

5.மின்சாரம் தயாரிக்க ஆகும் செலவையாவது வசூலிக்கும் வகையில் இந்த ஆண்டு ஜூலை ம் தேதிக்குள் மின்சார கட்டணத்தை உயர்த்த வேண்டும்.

6. ஆண்டுக்கு 2 முறையாவது எரிவாயு விலையை உயர்த்த வேண்டும். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள், தயாரிக்க ஆகும் செலவிற்கு இணையாக விலையை உயர்த்த வேண்டும்.

7. தொழில்துறை எரிசக்தி பயன்பாட்டை தேசிய மின் கட்டமைப்புக்கு மாற்றுவதை கொண்டு மே மாத இறுதிக்குள் பார்லிமென்ட் சட்டம் இயற்ற வேண்டும்.

Advertisment
Advertisements

8.17.6 டிரில்லியன் புதிய பட்ஜெட்டுக்கு பார்லிமென்ட் ஒப்புதல் தர வேண்டும்.

9. மின்சார கட்டணம் யூனிட்டுக்கு ரூ.3.21, உச்சவரம்பை ஜூன் மாதத்திற்குள் நீக்க சட்டம் இயற்றப்பட வேண்டும்.

10. 3 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்பட்ட கார்களை இறக்குமதி செய்ய விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்.

11.2035ம் ஆண்டுக்குள் தொழில்துறை பூங்காக்கள் மண்டலங்களுக்கான அனைத்து நிதிச் சலுகைகளையும் நீக்குவதற்கு, நடப்பு 2024ம் ஆண்டு இறுதிக்குள் பாகிஸ்தான் ஒரு திட்டத்தைத் தயாரிக்க வேண்டும்.

இந்த புதிய நிபந்தனைகளை நிறைவேற்றவில்லை என்றால் அடுத்த தவணை நிதி விடுவிக்கப்படாது என சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இப்போது, பாகிஸ்தானுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய நிபந்தனைகளுடன் சேர்த்து,மொத்த நிபந்தனைகளின் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளன. எனினும், பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான நிபந்தனைகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Pakistan India

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: