IMF revises India’s growth projection from 7.3 to 6.1% in 2019 - இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.1% ஆக குறையும் - சர்வதேச நிதியம் அறிக்கை
சர்வதேச நிதியம் செவ்வாயன்று, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி திட்டத்தில் 2019க்கான விகிதத்தை 6.1 சதவீதமாகக் குறைத்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இது ஏப்ரல் மாத கணிப்புகளை விட 1.2 சதவீதம் குறைவாகும்.
Advertisment
2019-ம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.3% ஆக இருக்கும் என்று கடந்த ஏப்ரலில் கூறியதை தற்போது மாற்றி குறைவாக 6.1% வளர்ச்சி விகிதமே எதிர்ப்பார்க்க முடியும் என்று பன்னாட்டு நிதியம் ஐ.எம்.எஃப். தெரிவித்துள்ளது.
ஆனால் 2020ம் ஆண்டு வாக்கில் பொருளாதாரம் வளர்ச்சி கண்டு 7% வளர்ச்சியை நோக்கிச் செல்லும் என ஐ.எம்.எஃப் குறிப்பிட்டுள்ளது. ஞாயிறன்று உலக வங்கியும் இந்திய பொருளாதார வளர்ச்சியை 2019-ம் ஆண்டில் 6% ஆகக் குறைத்தது. உள்நாட்டில் தேவை எதிர்பார்ப்பை விட மந்தமாக இருக்கும், அதனால் தான் பொருளாதார வளர்ச்சி 1.2% குறையும் என்று ஐ.எம்.எஃப். தெரிவித்துள்ளது.
Advertisment
Advertisements
ஏப்ரல் மாத கணிப்புகளுடன் ஒப்பிடும்போது, 2019 ஆம் ஆண்டிற்கான 1.2 சதவீத புள்ளிகள் மற்றும் 2020ம் ஆண்டிற்கான 0.5 சதவிகித புள்ளிகளின் கீழ்நோக்கிய திருத்தம், எதிர்பார்த்ததை விட பலவீனமான உள்நாட்டு தேவையை பிரதிபலிக்கிறது என்று ஐ.எம்.எஃப். தெரிவித்துள்ளது. "கார்ப்பரேட் வருமான வரி விகிதங்களில் குறைப்பு, கார்ப்பரேட் மற்றும் சுற்றுச்சூழல் ஒழுங்குமுறை நிச்சயமற்ற தன்மையை நிவர்த்தி செய்வதற்கான சமீபத்திய நடவடிக்கைகள் மற்றும் கிராமப்புற நுகர்வுக்கு ஆதரவளிக்கும் அரசாங்க திட்டங்கள் ஆகியவற்றால் வளர்ச்சி ஆதரிக்கப்படும்" என்று ஐ.எம்.எஃப் கூறியிருப்பதாக பி.டி.ஐ மேற்கோள் காட்டியுள்ளது.
2018 ஆம் ஆண்டின் வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது அடுத்த இரண்டு ஆண்டுகளில் சீனாவும் மெதுவான விகிதத்தில் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2018 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.6 சதவீதமாக வளர்ந்த நிலையில், இப்போது அதன் வளர்ச்சி 2019ல் 6.1 சதவீதமாகவும், 2020ல் 5.8 சதவீதமாகவும் இருக்கும் என்று ஐ.எம்.எஃப் கணித்துள்ளது.
தீர்வு நடவடிக்கைகளாக, ஐ.எம்.எஃப் தனது அறிக்கையில், சுழற்சியின் பலவீனத்தை நிவர்த்தி செய்வதற்கும் நம்பிக்கையை வலுப்படுத்த, நடுத்தர காலத்திற்கு இந்தியாவின் உயர்ந்த பொதுக் கடனைக் குறைக்க நம்பகமான நிதி ஒருங்கிணைப்பு பாதை தேவை என்று ஐ.எம்.எஃப் கூறியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news