ஏ.டி.எம் மெஷினில் பணம் எடுக்கும்போது, இந்த தவறுகள் செய்யாமல் இருக்க கவனமா இருங்கள். அதை பற்றி விளக்கும் தொகுப்பே இது.
காரின் பின் நம்பர் மற்றும் கார்டு விவரங்களை யாருடனும் பகிர வேண்டாம். இந்நிலையில் ஏ.டி.எம் மெஷினில் பணம் எடுக்க தெரியாதவர்கள் மற்றவர்களிடம் ஏ.டி.எம் கார்டை கொடுத்து பணம் எடுக்கச் சொல்வார்கள். அப்பை செய்யும்போது சிலர் உண்மையாக உதவி செய்வார்கள். ஆனால் சிலர் இந்த விவரங்களை பெற்று தவறாக பயன்படுத்தலாம்.
மேலும் உங்கள் ஏ.டி.எம் கார்டுகளின் பின்னைக் கேட்கும் எஸ்.எம்.எஸ் மற்றும் மெயில்கள், தொலைபேசி அழைப்புகளை எடுக்க வேண்டாம்.
மேலும் எளிதில் நினைவில் வைக்கக்கூடிய பிறந்த தேதி, மொபைல் நம்பர், அக்கவுண்ட் நம்பர் போன்ற எளிதில் யூகிக்கக்கூடிய நம்பரை ஒரு போதும், ஏ.டி.எம் பின்னாக வைக்க வேண்டாம். அதுபோல நம்பர் வரிசையில் உள்ள 1234 மற்றும் 4567 இதுபோன்று நம்பர்களை பின்னாக வைக்க வேண்டாம்.
மேலும் பணத்தை ஏ.டி.எம் மையத்தில் இருந்து எடுத்துவிட்டு, அதன் ரசீதை அங்கேயே விட்டு செல்லாதீர்கள். அதை பாத்திரமாக வக்கவும். ஏ.டி.எம் மையத்தில் கூட்டமாக இருந்தால், பின்னால் நிற்பவர்களை தள்ளிப்போகச் சொல்லுங்கள். எஸ்,எம்.எஸ் நோட்டிபிகேஷன்களை ஆன் செய்து வைய்யுங்கள். ஒவ்வொரு முறையும் நீங்கள் பணம் எடுக்கும்போது எஸ்.எம்.எஸ் உங்களுக்கு வரும்.
ஏ.டி.எம் இயந்திரத்தில் கார்டைப் பயன்படுத்தும்போது, கீபேடை நாம் மறைத்துக்கொண்டு டைப் செய்ய வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“