Advertisment

Education Loan; கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன் இந்த விஷயங்களைக் கவனியுங்கள்!

Important things you should know about education loans: கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்க போகிறீர்களா? இந்த முக்கியமான விஷயங்களை கவனியுங்கள்

author-image
WebDesk
New Update
Education Loan; கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன் இந்த விஷயங்களைக் கவனியுங்கள்!

கொரோனா காரணமாக பல மாத கால நிச்சயமற்ற தன்மைக்குப் பிறகு இப்போது 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. பல பல்கலைக்கழகங்கள் தங்கள் பட்டப்படிப்பு இறுதி ஆண்டு மாணவர்களின் முடிவுகளையும் தயார் செய்கின்றன. எனவே, மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் தங்களுக்கு விருப்பமான உயர்கல்வி படிப்புகளின் செலவினங்களை தற்போதே திட்டமிடுவது சிறந்தது. மாணவர்கள் கல்லூரி கட்டணத்தை சரியான நேரத்தில் செலுத்தத் தயாராக இல்லை என்றால் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளில் சேர்க்கை வாய்ப்பை இழக்க நேரிடும் என்பதால் அவர்களின் நிதித் திட்டமிடல் அவசியம்.

Advertisment

எந்தவொரு நிதிப் பற்றாக்குறையையும் தவிர்க்க, உயர்கல்வி சேர்க்கைக்கு கல்விக் கடன் மிகவும் உதவியாக இருக்கும். நீங்கள் சேரப் போகும் கல்லூரியை இன்னும் இறுதி செய்யாமல் இருக்கலாம், எனவே உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் இடத்தைப் பொறுத்து உங்கள் பணத் தேவை மாறுபடலாம். நீங்கள் சேர்க்கை நடைமுறைக்குச் செல்வதற்கு முன், எந்த கல்விக் கடன் மாறுபாடு பொருத்தமானது என்பதை அறிந்துகொள்வது அவசியம்.

இந்தியாவில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான கல்வி கடன்கள்

நீங்கள் இந்தியாவில் உங்கள் உயர் படிப்பை தொடர திட்டமிட்டுள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்படியானால், கல்விக் கடன் பெற நீங்கள் ஒரு வங்கியை அணுகலாம். கடனை அங்கீகரிப்பதற்கு முன், வங்கி 12 ஆம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்கள், விண்ணப்பதாரர் அல்லது இணை விண்ணப்பதாரரின் வருமானச் சான்று, கல்லூரியில் இருந்து சேர்க்கை கடிதம் போன்ற பல தகுதி அளவுகோல்களை வங்கிகள் சரிபார்க்கும். யுஜிசி, ஏஐசிடிஇ, அரசு போன்றவற்றால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மற்றும் இந்திய மேலாண்மை நிறுவனங்கள், இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்திய வணிகப் பள்ளி போன்ற புகழ்பெற்ற தன்னாட்சி நிறுவனங்களின் கல்லூரிகளில் சேர்வதற்கு வங்கிகள் எளிதாக கடன் வழங்குகின்றன.

கல்விக் கடன்களுக்கான வட்டி விகிதம் மற்றும் கடன் தொகை, உங்களின் கல்வி நிறுவனம் மற்றும் படிப்பு வகையைப் பொறுத்து மாறுபடும். ஐஐஎம் மற்றும் ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் சேர்க்கைக்கு குறைந்த வட்டியில் அதிக கடன் தொகையை பெரும்பாலான வங்கிகள் வழங்குகின்றன. தவிர, நீங்கள் ரூ .4 லட்சம் வரை கடனைத் தேடுகிறீர்களானால், நீங்கள் எந்த கட்டணத்தையும் (Margin money) செலுத்தத் தேவையில்லை. உங்கள் கடன் தேவை 4 லட்சத்திற்கு மேல் இருந்தால், நீங்கள் சுமார் 5% கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். கடன் வழங்குபவர்கள், நீங்கள் வேலைவாய்ப்பு பெற்று ஆறு மாதங்கள் அல்லது பாடநெறி முடிந்து ஒரு வருடம் கழித்து, கடனை திருப்பிச் செலுத்த அனுமதிக்கிறார்கள்.

வெளிநாட்டு இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான கல்வி கடன்கள்

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், வெளிநாட்டில் பட்டப்படிப்பு அல்லது முதுகலை படிப்புகளை படிப்பதற்காக கல்வி கடன் வசதிகளை வழங்குகின்றன. இதற்கு நீங்கள் சேர்க்கை எடுக்க விரும்பும் கல்லூரி, கடன் வழங்குபவரின் தகுதியான நிறுவனங்களின் பட்டியலில் இருக்க வேண்டும். பாடத் தொகை, கல்லூரி போன்றவற்றைப் பொறுத்து கடன் தொகை மாறுபடலாம். ஒரே கல்லூரி மற்றும் படிப்புக்கான கடன் தகுதி விதிமுறைகள் ஒரு கடன் வழங்குபவரிடமிருந்து மற்றவருக்கு வேறுபடலாம் என்பதை இங்கே கவனிக்க வேண்டும். மேலும், உள்நாட்டு அல்லது வெளிநாட்டு நிறுவனத்தில் படிக்க விரும்புகிறார்களா என்பதைப் பொருட்படுத்தாமல், இந்திய குடிமக்களுக்கு மட்டுமே கல்வி கடன்கள் கிடைக்கும்.

நீங்கள் வெளிநாட்டில் படிக்கத் திட்டமிடும் போது பெரும்பாலான கடன் வழங்குபவர்கள் கல்விக்கடனுக்கு எதிராக உதவித்தொகை அல்லது ஊக்கத்தொகையை அனுமதிக்கின்றனர். வெளிநாட்டு படிப்புகளுக்கான கல்விக் கடன்களின் கீழ் திருப்பிச் செலுத்துவதற்கான தேவைகள் உள்நாட்டுப் படிப்புகளுக்கான கல்விக் கடன்களிலிருந்து மாறுபடலாம். பெரும்பாலான வங்கிகள் உள்நாட்டு அல்லது வெளிநாட்டு கல்லூரிக்கு எடுக்கப்பட்ட கல்விக் கடனைப் பொருட்படுத்தாமல், அதிகபட்சமாக 15 வருட திருப்பிச் செலுத்தும் காலத்தை அனுமதிக்கின்றன.

பாடநெறி சார்ந்த கல்வி கடன்கள்

நீங்கள் தொடர திட்டமிட்டுள்ள பாடத்திட்டத்தைப் பொறுத்து கல்விக் கடன்களும் மாறுபடலாம். மருத்துவம், சட்டம், பொறியியல் போன்ற இளங்கலை மற்றும் முதுகலை தொழில்முறை படிப்புகளுக்கு பாடநெறி சார்ந்த கடன்கள் கிடைக்கின்றன. படிப்பின் வகையைப் பொறுத்து நிதி தேவைகள் மாறுபடலாம்; உதாரணமாக, MBBS மற்றும் MBA படிப்புகளுக்கான நிதி தேவைகள் மற்ற படிப்புகளுடன் ஒப்பிடும்போது மிக அதிகமாக இருக்கும்; எனவே, வங்கிகள் பொதுவாக அதிக நிதி தேவைப்படும் படிப்புகளுக்கு அதிக கடன் வசதிகளை அனுமதிக்கின்றன.

கல்வி கடன்கள் மற்றும் இணை தேவைகள்

கடன் தொகை ரூ .7.5 லட்சத்தை தாண்டினால், வங்கிகள் பொதுவாக கடனைப் பெற பிணையம் கேட்கின்றன. இருப்பினும், கடன் தேவை அதிகமாக இருக்கும் ஐஐஎம், ஐஎஸ்பி, ஐஐடி போன்ற முதன்மை நிறுவனங்களில் சேர்க்கைக்கு, பெரும்பாலான வங்கிகள் பிணையற்ற கடனை அனுமதிக்கின்றன. பிரீமியர் அல்லாத நிறுவனங்களுக்கான கடன் தொகையில் 1% -2% வரம்பில் செயலாக்கக் கட்டணம் இருக்கும்போது, ​​பெரும்பாலான வங்கிகள் முதன்மை நிறுவனங்களில் சேர்க்கைக்காக இந்தக் கட்டணங்களை தள்ளுபடி செய்கின்றன.

மனதில் கொள்ள வேண்டிய வேறு சில முக்கியமான விஷயங்கள்

நீங்கள் கல்விக் கடனின் உதவியுடன் உயர் படிப்பைத் தொடர திட்டமிட்டால் உறுதியான திட்டத்துடன் தயாராக இருக்க வேண்டும். தகுதிக்கான விதிமுறைகள், வட்டி விகிதங்கள், செயலாக்க நேரம், கடன் கட்டணங்கள் போன்றவற்றின் அடிப்படையில் பல்வேறு வங்கி சலுகைகளை ஒப்பிட்டுப் பார்க்கவும். நீங்கள் வங்கிகளின் தகுதித் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்றால், NBFC களை கடன் பெற அணுகலாம். இவை கல்விக் கடன்களுக்கான எளிமையான தகுதித் தேவைகளை கொண்டிருப்பதோடு சற்று அதிக கட்டணத்தில் கடன் வழங்கலாம்.

நீங்கள் தேர்ந்தெடுத்த கடன் வழங்குபவரின் வகையைப் பொருட்படுத்தாமல், பின்னர் தேவையற்ற சிக்கல்களைத் தவிர்ப்பதற்கான ஆவணத் தேவைகள் குறித்து உங்களுக்கு முழுமையான தெளிவு இருப்பதை உறுதிசெய்யுங்கள். மிக முக்கியமாக, உங்கள் விருப்பமான கல்லூரியில் நீங்கள் தேர்ந்தெடுத்த பாடத்தின் எதிர்கால வாய்ப்புகளை கவனமாக மதிப்பீடு செய்யுங்கள், இதனால் நீங்கள் கல்வி கடனை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்த முடியும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Education Business
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment