Advertisment

கோவையில் பூக்கள் விலை கிடுகிடு.. ஆயுதப் பூஜை விற்பனை படுஜோர்.!

கடந்த இரண்டு வாரங்களாக குறைந்திருந்த பூக்கள் விலை தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
In Coimbatore the prices of flowers have gone up on the occasion of Navratri

நவராத்திரி, பூக்கள் விற்பனை, கோவையில் பூக்கள் விற்பனை, நவராத்திரி பூக்கள் விற்பனை, Navratri, Navratri flowers rate in coimbatore, Navrathri celebrations in covai

கோவை ஆர்.எஸ்.புரம் அருகே பூ மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு வருகின்றன.

இங்கு மொத்தமாகவும், சில்லறையாகவும் பல்வேறு விதமான பூக்கள் விற்பனையாகி வருகின்றன.

Advertisment

கோவை பூ மார்க்கெட்டில் இருந்து அண்டை மாநிலமான கேரளாவுக்கும் அதிகளவில் பூக்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. கடந்த மாத தொடக்கத்தில் கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.

இந்தப் பண்டிகையின் போது மலையாளம் மொழி பேசுபவர்கள் தங்களின் வீடுகளின் முன்பு பூக்களினால் கோலம் போடுவது வழக்கம்.

இதன் காரணமாக மாதத்தின் தொடக்கத்திலேயே பூக்கள் விலை கடுமையாக உயர்ந்திருந்தது. மல்லிகைப்பூ மட்டும் கிலோ 4,000 ரூபாய் வரை விற்பனையானது.

இந்த நிலையில் தற்போது நவராத்திரி பண்டிகை தொடங்கி உள்ளது. இந்த பண்டிகைக் காலத்தில் மக்கள் 10 நாட்கள் வீட்டில் கொலு அமைத்து தெய்வங்களுக்கு மலர்கள் தூவி வழிபாடு செய்வது வழக்கம்.

இதனால் கடந்த இரண்டு வாரங்களாக குறைந்திருந்த பூக்கள் விலை தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது.

மேலும் நாளை மறுநாள் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை உள்ளிட்ட பண்டிகைகள் வர உள்ளதால் பூக்கள் விலை அதிகரித்துள்ளது.

அதன்படி மல்லி ஒரு கிலோ ரூ.800 முதல் 1000 வரை விற்பனையானது. ஜாதி மல்லி ரூ.600, செவ்வந்தி ரூ.400, ரோஜா ஒரு கிலோ ரூ.320, அரளி ரூ.300, தாமரை ஒன்று ரூ.20, கோழி பூ ரூ.100, மருகு ரூ. ஒரு கட்டு ரூ.30, மரிகொழுந்து ஒரு கட்டு ரூ.30, நந்தியா வட்டம்ரூ.200, சம்பங்கி ரூ.30, செண்டுமல்லி ரூ.100, வாடாமல்லி ரூ.100, பனை ஓலை ஒன்று ரூ.5, வாழை குலை ஒன்று ரூ.20, எலுமிச்சை ஒரு கிலோ ரூ.160- ஆக அதிகரித்து இருந்தது.

அதேபோன்று வெள்ளை பூசணி ஒரு கிலோ ரூ.40, தேங்காய் ரூ.15 முதல் 30 வரையும், சாத்துகுடி ரூ.100, ஆரஞ்சு ரூ.150, மாதுளை ரூ.220, ஆப்பிள் ரூ.150, திராட்சை ரூ.120, கொய்யா ரூ.100-க்கும் விற்பனையானது.

செய்தியாளர் பி.ரஹ்மான்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment