Fixed Deposits | தனியார் வங்கிகளான ஹெச்.டி.எஃப்.சி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ உள்ளிட்ட வங்கிகள் தங்களின் வங்கிகளின் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை இம்மாதத்தில் திருத்தியுள்ளன.
அதன்படி ஐசிஐசிஐ வங்கியின் திருத்தப்பட்ட புதிய வட்டி விகிதங்கள் பிப்.17,2024 முதல் அமலுக்கு வருகின்றன. ஹெச்.டி.எஃப்.சி வட்டி விகிதங்கள் பிப்.9ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி எஃப்.டி வட்டி விகிதங்கள்
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ரூ.2 கோடிக்கும் குறைவான ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை திருத்தியுள்ளது. அதன்படி தற்போது வங்கி அதிகப்பட்சமாக மூத்தக் குடிமக்களுக்கு 7.75 சதவீதமும், சாதாரண குடிமக்களுக்கு 7.25 சதவீதமும் அதிகப்பட்சமாக வட்டி விகிதங்களை வழங்குகிறது.
தொடர்ந்து வங்கி 7-14 வரையிலான டெபாசிட்களுக்கு சாதாரண குடிமக்களுக்கு 3 சதவீதமும், மூத்தக் குடிமக்களுக்கு 3.50 சதவீதமும் வட்டி விகிதத்தை வழங்கும்.
ஹெச்.டி.எஃப்.சி வங்கி வங்கி
ஹெச்.டி.எஃப்.சி வங்கியை பொறுத்தமட்டில் 7-14 நாள்களுக்கு 3 சதவீதம் வட்டியும், 15-29 நாள்களுக்கு 3 சதவீதம் வட்டியும், 30-45 நாள்களுக்கு 3.50 சதவீதம் வட்டியும் வழங்குகிறது.
இதில் அதிகப்பட்சமாக மூத்தக் குடிமக்களுக்கு 0.50 சதவீதம் கூடுதல் வட்டி கிடைக்கும்.
வங்கியானது 18 மாதங்கள் முதல் 21 மாதங்கள் வரையிலான டெபாசிட்களுக்கு மூத்தக் குடிமக்களுக்கு 7.75 சதவீதமும், சாதாரண குடிமக்களுக்கு 7.25 சதவீதமும் வட்டி வழங்குகிறது.
ஒப்பீடு
சம்பந்தப்பட்ட வங்கி இணையதளங்களின் கூற்றுப்படி, 4 ஆண்டுகள் 7 மாதங்கள்- 55 மாதங்கள் டெபாசிட்டுக்கு ஹெச்டிஎஃப்சி வங்கி அதிகப்பட்சமாக 7.20 சதவீதம் வட்டியும், 18 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுக்கு ஐசிஐசிஐ வங்கி 7.20 சதவீதம் வட்டியும் வழங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“