Income Tax Department’s DIN Number : இனிமேல் வருமான வரித் துறை சம்பந்தப்பட்ட ஆவணங்கள், நோட்டீஸ்கள், சம்மன்கள் என அனைத்து விஷயங்களும் மத்திய அலுவலகத்தின் அனுமதியோடு, கணினி வழியாகத்தான் அனுப்பப்படும். இந்த அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மாதம் அறிவித்திருந்தார். இத்துடன் அனுப்பப்படும் அனைத்து தகவல்களுக்கும் டி ஐ என் (DIN - Document Identification Number) நம்பர் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த புதிய மாற்றம் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
வருமான வரித்துறை சார்த்த அதிகாரிகள் பங்குகளை பறிமுதல் செய்ததாக அண்மையில் எழுந்த குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து இந்த அதிரடி மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.இனிவரும் காலங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் எந்த ஒரு ஆவணங்களையும் கணினி மூலமே அனுப்ப வேண்டும். அவர்கள் அனுப்பப்படும் ஆவணங்களுடன் டி ஐ என் நம்பர் இருக்க வேண்டும். அப்படி டி ஐ என் நம்பர் இல்லாத வருமான வரித் துறை சார்ந்த டாக்குமெண்ட்கள் ஏற்றுக் கொள்ளப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரைக்கு 17,000 அதிகமான டி ஐ என் நம்பர் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மிக முக்கியமாக வருமான வரித் துறையில் இருந்து வரி செலுத்துபவர்களுக்கோ அல்லது நிறுவனங்களுக்கோ கொடுக்கப்படும் ஆவணங்கள், நோட்டீஸ்கள், சம்மன்கள் அனைத்திற்கும் பதில் அளிக்கத் தொடங்கி மூன்று மாதங்களுக்குள் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுருத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லை அக்டோபர் 01, 2019-க்கு முன் கொடுக்கப்பட்டு இருக்கும் அனைத்து வருமான வரித் துறை சார்ந்த ஆவணங்கள், நோட்டீஸ்கள், சம்மன்கள் அனைத்தும் புதிதாக கணினி வழியாக அனுப்பப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த முக்கிய மாற்றங்கள் அனைத்தும் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதலே அமலுக்கு வந்துவிட்டது.