income tax filing due date : வருமானம் ஈட்டும் தனிநபர்களுக்கு வருமானவரி தாக்கல் என்பது மிக முக்கியமான ஒன்று. பெரும்பாலானோருக்கு எதைத் தவிர்க்க வேண்டும் எனத் தெரியாது மற்றும் சிலருக்கு இதைத் தவிர்த்துவிடலாம் என எளிதில் நினைத்துவிடுவர் இது இரண்டுமே ஆபத்து. அதிலும் குறிப்பாக, முதல்முறை வருமானவரி தாக்கல் செய்பவர்கள் ஏராளமான தவறுகளைச் செய்ய வாய்ப்புள்ளது.
வருமான வரி தாக்கலின் போது கவனத்தில் கொள்ளவேண்டிய சில் முக்கியமான தகவல்களை இதோ உங்களிடம் பகிர்ந்துக் கொள்கிறோம். தெரிந்துக் கொண்டு பயனடையுங்கள்.
1. இந்த வருடம் வருமானவரி தாக்கல் செய்யவேண்டும் எனத் தெரிந்த உடனேயே படிவம் 26AS-ஐ சரிபார்க்க வேண்டும். இதன் மூலம் வரி விவரங்கள் உங்கள் பான் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்யலாம். நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தால் படிவம் 16 உங்களுக்கு வழங்கப்படும். உங்களிடம் ஏற்கனவே பிடித்தம் செய்யப்பட்ட வரி, உங்கள் வருமானத்திற்கு மீதான TDSஐ உள்ளடக்கிய வரி மற்றும் வட்டி விவரங்கள் படிவம் 26AS-ல் குறிப்பிடப்பட்டிருக்கும்.
2. நிரந்தர வைப்புநிதி மற்றும் இதர வரிச்சேமிப்புத் திட்டங்கள் அனைத்தும் முற்றிலும் வரிவிலக்கு பெற்றவை என நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனாலும் அவற்றின் மூலம் கிடைக்கும் வட்டிக்கு வரிசெலுத்த வேண்டும். இந்தச் சேமிப்புத் திட்டங்களுக்குப் பிரிவு80cன் கீழ் வரிவிலக்கு அளிக்கப்பட்டாலும், அதன் மூலம் கிடைக்கும் வட்டிக்கு அது பொருந்தாது.
3.வருமானவரி தாக்கலின் போது ஆதார் எண்ணை குறிப்பிடுவது மிகவும் முக்கியம். ஆதார் அட்டை இருப்பவர்கள் கண்டிப்பாக அதன் விவரங்களைக் குறிப்பிடவேண்டும். இல்லையெனில் வருமான வரித் துறையின் நோட்டீசை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்.
4. ஒரு நிதியாண்டில் நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தை மாற்றியிருந்தால், முந்தைய நிறுவனத்தின் விவரங்களைக் குறிப்பிட மறந்துவிடாதீர்கள். தற்போதைய நிறுவனங்கள் அந்த நிதியாண்டில் மீதியுள்ள மாதங்களுக்கு மட்டுமே வரி கணக்கிடப்பட்டுப் பிடித்தம் செய்யப்படும்
5. ஆண்டு வருமானம் ரூ50 லட்சத்தைத் தாண்டும் போது உங்களின் ஒவ்வொரு சொத்து மற்றும் வருமானம் வரும் வழிகளைத் தெரியப்படுத்த வேண்டும். இந்த வருமான வரம்பிற்குள் வருகிறவர்கள் தங்களின் அனைத்து அசையா சொத்துகள் மற்றும் பணம், நகை, பங்குகள், பத்திரங்கள், காப்பீட்டுத் திட்டங்கள் போன்ற அசையும் சொத்துக்கள் பற்றிய விவரங்களைக் குறிப்பிட வேண்டும். நீங்கள் பெற்ற கடனுக்கு விலக்கு உண்டு. இவற்றுடன் முக்கியமாக இந்தச் சொத்துகளின் மதிப்பைத் துல்லியமாகக் குறிப்பிட வேண்டும்.
6. உங்கள் ஒவ்வொரு வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்துக்கள் பற்றிய விவரங்களைத் தெரியப்படுத்துதல் மிக முக்கியம். உங்கள் வங்கி கணக்குகள், துவங்கிய தேதி, வட்டி வருவாய் போன்றவற்றையும் குறிப்பிட வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.