income tax filing last date : தனிநபர்கள், இந்து கூட்டுக் குடும்பம், நிறுவனங்கள் என அனைவரும் 2018-2019 நிதியாண்டுக்கான வருமான வரியை 2019 ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில் அபராதம், கூடுதல் வட்டி செலுத்த வேண்டி வரும். அத்தோடு நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் வாய்ப்பும் உண்டு. இந்நிலையில், சரியான காலக்கெடுவிற்குள் வருமான வரி தாக்கல் செய்யவில்லை எனில் என்ன ஆகும் ?
அபராதம்:
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31-ம் தேதிக்குள் வருமான வரியைச் செலுத்த வேண்டும். இந்த காலக்கெடு சில நேரங்களில் நீட்டிக்கவும் வாய்ப்புகள் உண்டு. அவ்வாறு வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால் 5,000 ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும். அதையும் மீறினால் 10,000 ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும்.
இதுவே வருமான வரி தக்கல் செய்பவரின் ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருக்கும்போது அபராதம் 1,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செலுத்த வேண்டிய வரிக்கு கூடுதல் வட்டி ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால், செலுத்த வேண்டிய வரிக்குக் கூடுதலாக 1 சதவீதம் வரை வட்டியைச் செலுத்த வேண்டும்.
read more. யார் யாரெல்லாம் வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்? அதற்கான தகுதிகள் தான் என்ன?
நீதிமன்றம் :
வருமான வரித் தாக்கல்செய்யாது விட்டால், வருமான வரி சட்டப் பிரிவு 142, 148 பிரிவுகளில் படி வருமான வரி துறையின் நோட்டிசிக்கு சரியான பதில் இல்லாத போது நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும்.
மேலும் செலுத்த வேண்டிய வரியைப் பொறுத்து 16 வருடங்கள் வரை சிறைத் தண்டனை வழங்கவும் நீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு. ரீஃபண்டு பெறுவதில் தாமதம் உங்கள் பான் எண் கீழ் கூடுதலாக வரி பிடித்தம் செய்யப்பட்டு இருந்தால், தாமதமாக வருமான வரி தாக்கல் செய்யும் போது அதைத் திரும்பப் பெறுவதும் தாமதமாகும்.