வருமான வரி தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்!

வருமான வரித்துறையினர் சார்பில் நினைவூட்டல் கடிதம் அனுப்பபட்டுள்ளது.

கடந்த இரண்டு நிதி ஆண்டுகளுக்கான வருமான வரிக் கணக்கு தாக்க செய்ய இன்றே(31.3.18) கடைசி நாள் என்று வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

2015-2016, 2016-2017 ஆண்டுக்களுக்கான வரி கணக்கை மார்ச் 31 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான பணிகளை வருமான வரித்துறையினர் வேகமாக செய்து வந்தனர்.

வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கு, உதவி செய்வதற்காக, துறை சார்ந்த, 30 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்தில், இதற்காக பல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், இணையதளம் வழியாகவும், வருமான வரித் தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.

தனியார் நிறுவனத்தைச் சார்ந்த பணியாளர்கள், சிறப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு நிதியாண்டுகளுக்கான, வருமான வரி கணக்கை, 31க்குள் செலுத்த வேண்டும் என்பதற்காக, அரசு விடுமுறை தினங்களிலும், வருமான வரி அலுவலகம் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. அலுவலகங்கள் செயல்படும் நேரம் கூடுதலாகப்பட்டுள்ளது. சிறப்பு கவுன்டர்கள், கடந்த 22ம் தேதியில் இருந்து செயல்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு முதல், நடப்பு நிதியாண்டு வருமான வரி கணக்கை, அடுத்த ஆண்டுக்குள் செலுத்தும் நடைமுறையை, மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. 2017 – 18ம் ஆண்டுக்கான வருமான வரியை, 2018 ஜூலை, 31க்குள் செலுத்த வேண்டும். அதற்குப் பின், 2019 மார்ச், 31க்குள் செலுத்துபவர் களுக்கு, 1,000 ரூபாய் முதல், 5,000 ரூபாய் வரை, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் சட்டத் திருத்தமும் இந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது.

மேலும், கடைசி நாளான இன்று வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாதவர்கள் இனி, வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவே முடியாது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மாதம் மட்டும், 20 லட்சம் பேருக்கு, வருமான வரித்துறையினர் சார்பில் நினைவூட்டல் கடிதம் அனுப்பபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Business news in Tamil.

×Close
×Close