2018 - 19 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரியை தாக்கல் செய்ய தேவைப்படும் முக்கிய ஆவணங்கள்

இந்த முக்கியமான பத்து ஆவணங்கள் உங்களிடம் இல்லையென்றால் உங்களால் வருமான வரி தாக்கல் செய்ய இயலாது

வருமான வரியினை தாக்கல் செய்ய இது தான் சரியான நேரம் என்பதால் வருமான வரியினை செலுத்துபவர்கள் மத்தியில் சிறிது குழப்பமும் பதற்றமும் நிலவி வருகின்றது. வருமான வரி என்பது மக்கள் நேரடியாக அரசாங்கத்திற்கு அளிக்கும் வரியாகும். ஒவ்வொருவருக்குமான வருமான வரி அவர்களுக்கு கிடைக்கும் வருமானத்தைப் பொறுத்து மாறும். வருமான வரி தாக்கல் செய்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். நீங்கள் வருமான வரியை கட்டியிருக்கின்றீர்கள் என்பதற்கான சான்று அது தான்.

நீங்கள் வருமான வரித் தாக்கல் செய்வதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள  10 சான்றுகளும் மிக அவசியம்.

1. பான் கார்ட் (PAN Card)

மத்திய வருமான வரித்துறையினரால் பொது மக்களுக்கு வழங்கப்படும் அட்டை இது. பெர்மனண்ட் அக்கவுண்ட் நம்பர் என்றழைக்கப்படும் இந்த அட்டையில் உறுப்பினரின் பெயர், அவருடைய தந்தை பெயர், பிறந்த நாள் மற்றும் பான்கார்ட் நம்பர் ஆகியவை இருக்கும். வருமான வரி தாக்கல் செய்ய மிக முக்கியமாக தேவைப்படும் ஆவணம் இதுவாகும்.

2. ஆதார் அட்டை

ஆதார் இந்திய அரசால் வழங்கப்படும் முக்கியமான அடையாள அட்டையாகும். இதில் உறுப்பினரின் பெயர், பிறந்த தேதி, வசிப்பிட முகவரி மற்றும் 12 இலக்க எண் ஆகியவை இடம் பெற்றிருக்கும். வருமான வரி தாக்கல் செய்ய இந்த ஆவணமும் மிக முக்கிய ஒன்றாகும்.

3. சேலரி ஸ்லிப்

இந்த ஸ்லிப்பினை பயன்படுத்தி வருமான வரி தாக்கல் செய்பவரின் வருமானம், பிடித்தம், வீட்டு பராமரிப்பு மற்றும் பயணத்திற்காக அளிக்கப்படும் வருமான விகிதம் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்,

4. ஃபார்ம் 16

இந்த ஃபார்மினை டேக்ஸ் டிடெக்டட் அட் சோர்ஸ் (Tax Deducted at Source) என்பர். இது ஒரு ஊழியருக்கு, அவரின் நிறுவனம் அளிக்கும் சான்றிதழாகும். இந்த ஆவணத்தில் வேலை செய்பவருக்கு அளிக்கப்படும் மாதச் சம்பளம் மற்றும் TDS ஆகியவை பற்றிய விளக்கமான தகவல்கள் இருக்கும். இந்த ஃபார்மில் நிறுவனத்தின் PAN மற்றும் TAN எண் இடம் பெற்றிருக்கும்.

5. ஃபார்ம் 26As

இது வருடாந்தர வரி அறிக்கை ஆகும். உங்கள் பான் கார்ட் கணக்கில் நடைபெற்றிருக்கும் வரி பிடித்தம் பற்றிய முழு விபரத்தினை அறிந்து கொள்ள இந்த அறிக்கை உதவும். ட்ரேசஸ் (TRACES) இணையத்திலிருந்து உங்களுடைய தகவல்களை பெற்றுக் கொள்ளலாம். அல்லது உங்களுடைய ஃபார்ம் 26Asனை பதிவு செய்து கொள்ளலாம்.

6. வங்கி மற்றும் தபால் நிலையத்திலிருந்து பெறப்படும் வட்டிக்கான சான்றிதல்

வங்கியில் இருக்கும் சேமிப்புக் கணக்கு அல்லது தபால் நிலையத்தில் சேமிக்க வைக்கப்பட்டிருக்கும் பணம், ஃபிக்ஸ்ட் டெப்பாசிட் ஆகியவற்றிற்கும் வரி செலுத்த வேண்டும். ஆகவே உங்களுடைய வங்கி விபரங்களுடன் கூடிய சேமிப்பு கணக்கு விபரம் மற்றும் அதற்கான வட்டி விகிதம் அடங்கிய ஆவணத்தைப் பெறுவதும் அவசியம்.

7. வரி சேமிப்பு ஆவணங்கள்

முதலீடு மற்றும் செலவுகள் தொடர்பாக வருமான வரி விலக்கு வேண்டுபவர்கள் சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

எம்ப்ளாயீஸ் ப்ரோவிடெண்ட் ஃபண்ட் (Employees Provident Fund (EPF))

பப்ளிக் ப்ரோவிடெண்ட் ஃபண்ட் ( Public Provident Fund (PPF))

ம்யூச்ச்சுவல் ஃபண்டுகளில் செய்யப்படும் முதலீடுகள்

காப்பீட்டு பாலிசி

பென்சன் திட்டம்

8. 80C மட்டுமல்லாமல் 80D மற்றும் 80U பிரிவுகளின் கீழும் முதலீடு மற்றும் செலவுகள் மூலமாக வருமான வரி விலக்கினை பெற்றுக் கொள்ளலாம். நடப்பு நிதியாண்டில் ஏதாவது மருத்துவக் காப்பீடு ப்ரீமியம் கட்டியிருந்தால் அதனை செக்‌ஷன் 80Dயில் சமர்ப்பித்து வரி விலக்கினைப் பெற்றுக் கொள்ளலாம்.

9. வீட்டுக் கடன் பத்திரம்

பட்டியலிடப்பட்ட முக்கியமான நிதி நிறுவனங்களில் நீங்கள் வீட்டுக் கடன் வாங்யிருந்தால் உங்களால் வருமான வரி விலக்கினை பெற முடியும். அதற்கு முறையாக உங்களின் வீட்டு வங்கிக் கடன் ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.

10. பெரிய வருமானம்

ம்யூச்சுவல் ஃபண்ட் அல்லது ஏதாவது சொத்துக்களில் இருந்து உங்களுக்கு வருமானம் கிடைக்கப்பெற்றிருந்தால் அதை முறையே ஆவணப்படுத்தி அதையும் வருமான வரித் தாக்கல் செய்யும் போது சமர்பிக்க வேண்டும்.

Get all the Latest Tamil News and Business News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close